அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. தமிழகத்தில் பல இடங்களில் மழை இருக்கு.. வானிலை மையம் கொடுத்த மேஜர் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே மழை விட்டிருந்த நிலையில், மீண்டும் மழை ஆரம்பிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 4ம் தேதி முதல் மீண்டும் பரவலாக மழை ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் மழை இருக்கும்.. கனமழை பெய்யுமா என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்!
வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்றைய தினம் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

வானிலை மையம்
நாளைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை இருக்கு
நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 4ம் தேதி முதல் மீண்டும் பரவலாக மழை ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் மேலும், "வரும் பிப்ரவரி 4ம் தேதி தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
பிப்ரவரி 5ம் தேதி தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். திண்டுக்கல் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். பிப்ரவரி 6, 7 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
24 மணி நேரக் குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல் போக்கைப் பொறுத்தவரை வரும் பிப்ரவரி 5ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டைப் பொறுத்தவரை வரும் பிப்ரவரி 5ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று நாளை (02-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழகக் கடலோரப்பகுதிகளில் வரும் 5ம் தேதி முதல் தென்தமிழகக் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் வரும் 4ம் தேதி பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications