தாம்பரமே நனைந்தது.. விடிய விடிய கொட்டிய மழை.. அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம் முழுக்க மழை.. ஜில் நியூஸ்
சென்னை: இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு, தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்ய போவதாக வானிலை ஆய்வு மையம் ஜில் ஜில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் 2 நாட்களுக்கு முன்பே கணித்து கூறியிருந்தது.
வளிமண்டல சுழற்சி: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, வரும் ஞாயிறன்று, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதேபோல, தமிழகத்தின் மற்ற வட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்ய கூடும்.
மீனவர்கள்: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் தென் கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பு வந்துள்ளது.. இதில், அடுத்த 7 நாட்களுக்கு மழை வரப்போவதாக கூறியுள்ளது.. அதில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். வானிலை ஆய்வு மையம் இதுகுறித்த அறிவிப்பில், "இன்றைய தினம், தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
எதிர்பார்ப்பு: 26, 27ல் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்
ஆக, இன்றுமுதல் வருகின்ற 31ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழைப்பெய்வது மிகுந்த மகிழ்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே, சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் சூழ்ந்தது.. குறிப்பாக, மேற்கு தாம்பரம் பகுதியில் 11.4 சென்டிமீட்டர் அளவுக்கு கன மழை பெய்துள்ளது. இதன் காரணமாக தாம்பரத்தில் மேற்கு பகுதியில் இருந்து கிழக்குப் பகுதிக்கு செல்லும் ெரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழை நீர் தேங்கி நின்றது. இதன்காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பில், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
பெருங்களத்தூர்: அதேபோல பழைய ஜி.எஸ்.டி. சாலை, குரோம்பேட்டை, பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை, செம்பாக்கம், திருமலை நகர், பெருங்களத்தூர் ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications