weather: சண்டே அதுவுமா பல்லை காட்ட போகுது பங்குனி வெயில்..ஆனால் ’இந்த’ மாவட்ட மக்களுக்கு ஜாலி தான்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் இன்று சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் பூமத்திய ரேகை அருகே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவானதால் சில மாவட்டங்களில் மழை பெய்தது. ஆனால் அதற்கு முன்னதாக வடகிழக்கு பருவமழை விடை பெற்றவுடன் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, ஆகிய மாதங்களில் இரவு நேரத்தில் கடுமையான பனிப்பொழிவும். பகல் நேரத்தில் கடுமையான வெயிலும் இருந்தது.

weather heat IMD

பிப்ரவரி தொடங்கிய சில நாட்களிலேயே கோடைகாலம் தொடங்கிவிட்டது போல வெயில் சுட்டு எரித்தது. தொடர்ந்து பல இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியது. தற்போது மார்ச் மாதம் நிறைவடைய இருக்கும் நிலையில், கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

அதே நேரத்தில் தமிழகத்தில் திடீர் மழை காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், மதுரை, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் குளிர்ந்த காலநிலை நிலவியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வெயில் அதிகரித்திருக்கும் நிலையில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

எனவே இன்று (27-03-2025) மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை (28-03-2025) மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 29 முதல் ஏப்ரல் 1 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. நாளை முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 23° செல்சியஸ் உயரக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+