நெருங்கும் ராட்சசன்.. தமிழ்நாட்டை நெருங்கிய வங்கக்கடல் புயல் சின்னம்.. மையப்பகுதி எங்கே இருக்கிறது?
சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையாது; காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து கரையை கடக்கும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார். இந்த தாழ்வு பகுதியின் மையம் தற்போது எங்கே உள்ளது என்று இங்கே பார்க்கலாம்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடல் பகுதியில் நிலவுகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருகிறது. இந்த தாழ்வு மையம் தமிழ்நாடு நோக்கி நகர தொடங்கி உள்ளது. அதாவது வடக்கு தமிழகம் - தெற்கு ஆந்திர பிரதேசம் நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த தாழ்வு பகுதி எங்கே செல்கிறது.. எங்கே இருக்கிறது என்ற புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து சுமார் 380 கிமீ தொலைவில் இந்த புயல் சின்னம் உள்ளது.
இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
13.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14. 11.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
15.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
16.11.2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தென்காசி, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
17.11.2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால்
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
-
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications