கோவையை சூழந்த மழை மேகங்கள்.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்! வதக்கி எடுத்த வெயிலுக்கு ரெஸ்ட்
கோயம்புத்தூர்: தமிழகத்தில் அக்னி வெயில் தொடங்கியிருந்தாலும், பரவலாக பெய்த மழை காரணமாக வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது. இந்நிலையில், கோவையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை மேகங்கள் சூழ தொடங்கியிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
தென்னிந்தியாவை பொறுத்த வரை கோடை என்பது மார்ச் இறுதி, ஏப்ரல் ஆரம்பத்தில்தான் தொடங்கும். ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி இறுதியில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. மார்ச் மாதத்தின் இறுதியில் வெயில் 100 டிகிரியை எட்டிவிட்டது. ஏப்ரல் முழுவதும் தமிழகத்தின் பரவலான இடங்களில் வெயில் உக்கிரமாக இருந்தது. குறிப்பாக கொங்கு மாவட்டங்களில் வெயில் உச்சத்தை தொட்டிருந்தது.

ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தமிழகத்திலேயே அதிக அளவில் வெயில் பதிவாகியிருந்தது. ஊட்டியில் இது வரை இல்லாத அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது. ஏப்ரல் 28ம் தேதியன்று 29 டிகிரி செல்சியஸ்(84.2 டிகிரி ஃபாரன்ஹீட்) அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது. கடந்த 73 ஆண்டுகளில் இதற்கு முன்னர் இந்த அளவில் வெயில் பதிவாகியிருந்ததில்லை. எனவே கோவை மற்றும் நீலகிரியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் நீர் இல்லாமல் ஆங்காங்கே உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன. கோவையில் மக்கள் காலி குடங்களுடன் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இப்படி இருக்கையில் இன்று கோவையை மழை மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. எனவே மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஏப்ரலில் இங்கு வெயில் உச்சம் தொட்டதை குறிப்பிட்ட அவர், இனி வரும் நாட்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கும் என்று தனது x பதிவில் கூறியுள்ளார். இதனால் கொங்கு மக்கள் சற்று ஆசுவாசமடைந்துள்ளனர்.
முன்னதாக இன்று காலை வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பிலும் கோவையில் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, "தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, தென்காசி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
13ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14 மற்றும் 15ல் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13ம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 45-55% ஆகவும், மற்ற நேரங்களில் 60-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications