தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்! இந்த மாவட்டங்கள் அலர்ட்டா இருக்கனும்.. லிஸ்ட் இதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று பேசப்பட்டு வந்த நிலையில், நவ.17-18 தேதிகளில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

இது குறித்து தனது x பக்கத்தில் வெதர்மேன் பதிவிட்டிருப்பதாவது, "ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு பிறகு நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் மழை பொழிவுக்கான நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன.

rain Weatherman

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு தொடங்கி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மழை பொழிவு அதிகமாக இருக்கும். நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் புயல் உருவாகும். ஆனால் அதற்கு முன்னதாகவே மழை பெய்யும். இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தவிர கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூரில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது" என தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிக்கையில், "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,

நவ. 13 முதல் 15 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ. 16ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.17ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சுன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 18ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

நாளை (13-11-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+