"2024 சம்பவம் நினைவிருக்க.." வெதர்மேன் கொடுத்த வார்னிங்.. அப்போ சென்னையில் என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், அடுத்த சில நாட்களிலும் மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளது. தர்மபுரி தொடங்கி ஈரோடு, வரை பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்க்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதேநேரம் சென்னையில் தொடர்ந்து வறண்ட கிளைமேட் தொடர்ந்து நிலவுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வழக்கமாக பெய்யும் மழையை விட குறைவு தான் என்றாலும் கடந்த சில நாட்களாகவே மழை தொடர்ந்து பெய்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் சென்னையில் இதுவரை மழை ஆரம்பிக்கவில்லை.

Tamil Nadu Weatherman

வெதர்மேன்

இதற்கிடையே மழை எந்தளவுக்கு தீவிரமாக கொட்டி தீர்க்கிறது என்பதை விளக்கியுள்ள தமிழ்நாடு வெதர்மேன், வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும் என்பது தொடர்பாகவும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். மேலும், சென்னையில் ஏன் மழை இல்லை என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில், "2024-ல் 'ஃபெங்கல்' புயலுக்கு பிறகு கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் மிக அதிகனமழை பதிவாகியுள்ளது. இன்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிகத் தீவிரமான மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் டெல்டா பகுதிகள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும். வழக்கம் போல தென் தமிழகத்தில் மதுரை மற்றும் சிவகங்கை பகுதிகளிலும் மழை இருக்கும்.

சென்னை

பெங்களூரை பொறுத்தவரை, இன்று அங்கும் மிக அதிகனமழை பெய்யும் நாளாக இருக்கும். மற்ற மாவட்டங்களில் மழை பெய்தாலும், துரதிர்ஷ்டவசமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மழை மேகங்கள் வரவில்லை. இன்று இப்பகுதிகளிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

வானிலை மையம்

முன்னதாக இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழக பகுதிகள் வழியாக ஒரு வடக்கு - தெற்கு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இன்றைய தினம் நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை கிளைமேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+