சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வறண்ட வானிலை! டமால் டுமீல் மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்
சென்னை: தென் மேற்கு பருவமழையால் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் நிலத்தை நோக்கி வீசுவதால் தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும். எங்கெல்லாம் வறண்ட வானிலை நிலவும் என்பதை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கேரளா, மகாராஷ்டிரா, தமிழகத்தின் ஒரு சில பகுதிகளுக்கு நன்மையை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை செயல்பாட்டில் உள்ளது. இதனால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது: பருவமழையில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நிலத்தை நோக்கி வீசுகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை.
சென்னையில் இன்று வெயில் இருக்கும். மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. டமால் டுமீல் மழைக்கு காத்திருக்க வேண்டும். அடுத்த இரு வாரங்களுக்கு வறண்ட வானிலைதான் மேற்கண்ட 4 மாவட்டங்களில் நிகழும்.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக மழை பெய்யும். நீலகிரி மாவட்டம் பந்தலூர், தேவாலா, அவலாஞ்சி ஆகிய இடங்களிலும் வால்பாறை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தென் மேற்கு பருவமழை பெய்யும். ஆனால் அபாயகரமானதாக இருக்காது.
கேரளாவிலும் பருவமழை பெய்யும். அங்கும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற அபாயங்கள் இருக்கும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திராவுக்கும் தெலுங்கானாவுக்கும் எந்த ஆபத்தும் இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், கடந்த 3 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை எந்த நிற எச்சரிக்கை கொடுத்தாலும் பள்ளி மாணவர்கள் விடுமுறையை எதிர்பார்க்க வேண்டாம். கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி வட சென்னை, மத்திய சென்னையில் சராசரியாக 30 முதல் 50 மி.மீ . மழை பெய்தது.
ஆனால் தென் சென்னையான அடையாறு, பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் மழை பெய்யவில்லை என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அடுத்த நாள் செப்டம்பர் 3 ஆம் தேதி தென் சென்னை பகுதிகளுக்கும் மழை பெய்தது.
கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் தங்கள் குடும்பத்தினரை இழந்து ஆதரவற்றவர்களாகினர். பலருக்கு வீடு, வாசல் இழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்காக அண்டை மாநிலங்கள், திரைத் துறையினர் கேரளாவில் வெள்ள நிவாரண நிதியையும் நிவாரண பொருட்களையும் அனுப்பி வைத்தனர். ஆந்திரா, தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் பயிர்கள், வாகனங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மழை வெள்ளத்தால் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications