ஒரு பக்கம் வெப்பம்.. மறுபக்கம் மழை.. குழப்பி எடுக்கும் தமிழ்நாடு வானிலை! சரி சென்னைக்கு மழை இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்து வரும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பம் ஓரிரு இடங்களில் அதிகரித்தாலும் கூட சில இடங்களில் மழை இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் (தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்) மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

weather rain tamil nadu

மழை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 40 மிமீ மழை பெய்துள்ளது. தஞ்சாவூர், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமாக மழை பெய்துள்ளது. வெப்பத்தைப் பொறுத்தவரைக் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் மதுரை விமான நிலையத்தில்: 39.3 ° செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக ஈரோட்டில் 19.0 ° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

வரும் நாட்களில் வானிலை: அடுத்து ஒரு வாரத்திற்கான வானிலை குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப். 14 முதல் செப். 18ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (12.09.2024 மற்றும் 13.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் வரும் செப். 13ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். செப். 14 முதல் செப். 16 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் இன்று செப். 12ம் தேதி தெற்கு, வடக்கு, மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை முதல் செப். 15 வரை தெற்கு, மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எச்சரிக்கை: அரபிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறதுட என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+