கூலிங் மோடில் தமிழ்நாடு! கொட்டோ கொட்டுனு கொட்டப் போகும் மழை! வெதர்மேன் கொடுத்த இனிப்பான அப்டேட்!
சென்னை: தமிழகத்தில் கடுமையான வெப்பம், வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நற்செய்தி ஒன்று வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் தமிழகம் உள்ளிட்ட தென் தீபகற்ப மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மகிழ்ச்சி தரும் செய்தியை கூறியுள்ளார்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாளுக்கு நாள் வெப்பநிலை கடுமையாக அதிகரித்து வருகிறது

குறிப்பாக வேலூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலையானது கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கே அச்சப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெப்ப அலை: இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை நான்கு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், சில மாவட்டங்களில் 115 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பரவலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. மேலும் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெப்ப அலை தமிழகத்திற்கும் பரவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடும் அச்சம்: மேலும் 1 ஆம் தேதியிலிருந்து 5 ஆம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் ஐந்து தினங்களில் அடுத்தடுத்து வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனவும் 5ஆம் தேதி வரை அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகக் கவனமுடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலும் கோடை வெயிலை சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது
வெதர்மேன்: இந்த நிலையில் தமிழ்நாட்டில் வரும் கோடை காலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை மைய ஆய்வாளரான பிரதீப் ஜான் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசி உள்ள அவர், ' கடுமையான வறட்சி தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தற்போது மிகப்பெரிய நல்ல செய்தி ஒன்று வந்திருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் தீபகற்ப மாநிலங்களில் கன மழை பெய்ய உள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு: எல்-நினோ வருகையால் நடப்பாண்டில் வெப்பச் சலனம் காரணமாக மழை பரவலாக பெய்யும். மேலும் தென் மேற்கு பருவக்காற்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர் கனமழையையும் தற்போதைய வானிலை முன் கணிப்பின் அடிப்படையில் நடப்பாண்டு கனமழை பெய்வதை உறுதி செய்யும் என தெரிவித்திருக்கிறார். இதே போல் இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்திருக்கும் நிலையில் வரும் வாரங்களில் தமிழகத்தில் நல்ல கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications