பெஞ்சல் புயல்.. பேட்டி இல்லை, விசிட்டும் இல்லை.. அரசியலில் குதித்த விஜய்.. சான்சை மிஸ் பண்ணிட்டாரே!
திருவண்ணாமலை: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் இதுவரை பெஞ்சல் புயல் தொடர்பாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை.. அதேபோல் நேரடியாக புயல் பாதித்த இடங்களை கூட பார்க்கவில்லை. ஏன் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை கூட விசிட் செய்யவில்லை.
பெஞ்சல் புயல் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன், என்று விஜய் குறிப்பிட்டு இருந்தார்.
விசிட் செய்யவில்லை: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் இதுவரை பெஞ்சல் புயல் தொடர்பாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. அதேபோல் நேரடியாக புயல் பாதித்த இடங்களை கூட பார்க்கவில்லை. ஏன் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை கூட விசிட் செய்யவில்லை.
விழுப்புரம் - திருவண்ணாமலை முழுக்க புயலால் பாதிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் நேரடியாக இங்கே விசிட் செய்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விசிட் செய்துள்ளார். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இது போக தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு விரைவில் நிவாரண தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.2000 டூ ரூ. 5000 வர இழப்பை பொறுத்து நிவாரணம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சேதங்களை பார்வையிட்டு பின்னர் இது தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.
ஆனால் அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க போகிறோம்.. மெஜாரிட்டி இடங்களில் வென்று ஆட்சியை பிடிப்போம் , எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்று கூறிய விஜய் இதுவரை களத்திற்கு செல்லவே இல்லை. இது போன்ற நேரங்களில்தான் கட்சி தொடங்கி ஒருவர் களத்திற்கு சென்று மக்களுடன் நிற்க வேண்டும். திமுக, அதிமுக போன்ற கட்சிகள் வளர காரணம் மக்களுடன் நின்றதே. ஆனால் விஜய் அப்படி ஒரு சான்சை மிஸ் செய்துவிட்டார்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம்












Click it and Unblock the Notifications