வீக்கான மேகக் கூட்டங்கள்.. சென்னையில் பகலில் மழை தொடருமா? வெதர்மேனின் முக்கிய அப்டேட்
சென்னை: சென்னையில் மழை தொடருமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று முன் தினம் இரவு முதல் மழையானது விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

எனினும் மாநகராட்சி அதிகாரிகள் அந்த தண்ணீரை உடனடியாக ராட்சத மோட்டார் மூலம் அகற்றினர். அது போல் சுரங்கங்களிலும் தண்ணீர் அகற்றபட்டு போக்குவரத்து எந்தவித தங்கு தடையின்றி செல்கிறது. இந்த நிலையில் சென்னையில் காலை பள்ளி செல்லும் நேரத்தில் மழை பெய்தது.
பிசுபிசுவென பெய்து வந்த மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை மாவட்ட ஆட்சியரோ சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என கூறிவிட்டனர். இதையடுத்து விடுமுறையா என டிவி பார்த்துக் கொண்டிருந்த பள்ளி குழந்தைகள் (பெற்றோர்களும்தான்!) பள்ளிக்கு கிளம்ப தயாராகினர்.
தமிழகத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் இன்று மழை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை மட்டும் அல்லாது புறநகர் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரை பொருத்தமட்டில் நேற்று இரவே மழை கொட்டித் தீர்த்தது. தற்போது மேகக் கூட்டங்கள் வலுவிழந்துவிட்டது. இதனால் இன்று பகல் பொழுதில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல தயாராகவும். அதே வேளையில் மேற்கு மாவட்டங்கள், தமிழகத்தின் உள் மாவட்டங்கள், தெற்கு மாவட்டங்கள், கேரளா உள்ளிட்டவைகளுக்கு இன்று கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
அந்த வகையில் இன்று முதல் நாளை மறுநாள் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் அனேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications