ஹய்யா ஜாலி! நாளை சென்னையில் இடியுடன் கூடிய மழை! ரெயின் கோட்டை மறக்காதீங்க! வெதர்மேன் முக்கிய அப்டேட்
சென்னை: சென்னையில் நாளை மழை பெய்யும் என்பதால் ரெயின் கோட்டை கொண்டு செல்ல மறக்காதீர்கள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நாளை டெல்டா மாவட்டங்கள், சென்னைக்கு நல்ல நாளாக அமைய போகிறது. டெல்டா மாவட்டங்கள், கரூர்- நாமக்கல் பெல்ட், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

சென்னையிலும் நாளை கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் ரெயின் கோட்டையும் குடையையும் கொண்டு செல்ல மறவாதீர்கள் என வெதர்மேன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. சென்னையில் கூட கடந்த இரண்டு, மூன்று தினங்களாக காலையில் வெயில் குறைந்து காணப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த மே 4 ஆம் தேதி முதல் கத்தரி வெயில் தொடங்கியது. இது வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும். கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கடுமையான வெப்பம் வாட்டி எடுத்தது. தமிழகத்தில் ஈரோடு, கரூர், திருத்தணி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை 105 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தது.
இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருந்தனர். வெப்ப வாதத்தில் சிலர் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதனால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ஊட்டிக்கு செல்லலாம் என இருந்தால் அங்கும் 78 ஆண்டுகளுக்கு பிறகு வெயில் வாட்டியது.
இதனால் ஊட்டி சென்ற சுற்றுலா பயணிகளும் வெயிலில் வாடினர். இந்த நிலையில் வேலூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து மக்களின் மனமும் குளிர்ந்தது. அது போல் தென்காசி, நெல்லை, கோவை, விருதுநகர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. அது போல் உள்மாவட்டங்களான திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கையில் கூறியிருப்பதாவது, "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். இதன் பகுதியாக தமிழகத்தில் இன்று (மே 15) ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிமீ வரை) லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.
திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், 18-ம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 35.6 - 37.4 டிகிரி பாரன்ஹீட் வரை படிப்படியாக குறையக்கூடும். சென்னை மற்றும் புறநகரை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைபெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.8 முதல் 98.6 டிகிரியை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 82.4 முதல் 84.2 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியும் இருக்கக்கூடும்".
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
Badam Pisin Jelly: கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான 'பாதாம் பிசின் பழக் கலவை ஜெல்லி! தயாரிப்பது எப்படி? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெயில் கொடுமை! உடல் சூட்டை தணிக்கும் 5 அற்புத உணவுகள்! இளநீர் குடிக்கும் போது அந்த தவறை செய்யாதீங்க! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications