கொட்டும் மழையிலும், வெள்ளத்திலும்.. நின்று போக்குவரத்தை சரி செய்த தவெக நிர்வாகிகள்.. கவனிச்சீங்களா
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு இடையிலும் மக்களுக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உதவி வருகின்றனர்.
சென்னையில் பல பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் வாகனங்கள் செல்ல வழிகாட்டியபடி உள்ளனர்.

சென்னையில் பல இடங்களில் நடமாடும் உணவு வாகனங்களை களமிறக்கி உள்ளனர்.தமிழக வெற்றிக் கழகம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஹரி அவர்கள் தலைமையில் நடமாடும் தளபதி விலையில்லா உணவகம் என்ற உணவகம் களமிறக்கப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டி சாலையில் கடுமையாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாகனங்கள் செல்வது கடினம் ஆகி உள்ளது. அங்கே வாகனங்கள் செல்ல தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உதவி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு இது முதல் ஆண்டு என்றாலும் கூட மழை என்றவுடன் களத்திற்கு வந்தது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
பெஞ்சல் புயல் இரவு 10 மணிக்கு மேல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 5 மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிந்துள்ளார். இரவில் புயல் கரையை கடக்கும் என்பதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 5 மணிநேரத்தில் 6 இடங்களில் 10 செ.மீ-க்கு மேல் மழை பதிவு. அதிகபட்சமாக பேசின் ப்ரிட்ஜ் பகுதியில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவொற்றியூர், மீனம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயலில் 10 செ.மீ மற்றும் தண்டையார்பேட்டையில் 11 செ.மீ. மழை பதிவுஃபெஞ்சல் புயலால் பெய்துவரும் கனமழை காரணமாக தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பெருங்களத்தூர், முடிச்சூர், சேலையூர் உள்ளிட்ட பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கனமழை காரணமாக கூவம் ஆற்றின் இருபுறங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மதுரவாயில், வானகரம், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம்: கனமழை காரணமாக கூவம் ஆற்றின் இருபுறங்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக நொளம்பூர் - மதுரவாயில் இடையே முக்கிய சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. தரைப்பாலம் மூழ்கியதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்கின்றன.
பெஞ்சல் புயல் இரவு 10 மணிக்கு மேல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 5 மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிந்துள்ளார். இரவில் புயல் கரையை கடக்கும் என்பதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 5 மணிநேரத்தில் 6 இடங்களில் 10 செ.மீ-க்கு மேல் மழை பதிவு. அதிகபட்சமாக பேசின் ப்ரிட்ஜ் பகுதியில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவொற்றியூர், மீனம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயலில் 10 செ.மீ மற்றும் தண்டையார்பேட்டையில் 11 செ.மீ. மழை பதிவுஃபெஞ்சல் புயலால் பெய்துவரும் கனமழை காரணமாக தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பெருங்களத்தூர், முடிச்சூர், சேலையூர் உள்ளிட்ட பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சாலையில் போடப்பட்டிருக்கும் இரும்பு தடுப்புகள் காற்றில் தூக்கி வீசப்பட்டதால் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. சென்னை மழைக்கு இடையே 4 மணி நேரத்தில் 8 மடங்காக நீர் வரத்து கிடு கிடுவென உயர்ந்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3,200 கன அடி அதிகரித்துள்ளது.

Click it and Unblock the Notifications