இதைத்தானே தமிழ்நாடே எதிர்பார்த்தது.. வானிலையில் ஏற்பட்ட ஜில் மாற்றம்.. குளிர வைத்த குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வெயில் குறையும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு செய்துள்ள போஸ்டில், தமிழ்நாட்டில் கோடைக்காலம் ஓய்வு பெறுவதால் தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை இன்று முதல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று முதல் இடியுடன் கூடிய மழை மற்றும் மழை பெய்யத் தொடங்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சிறப்பு அப்டேட் தேவையில்லை, என்று கூறியுள்ளனர்.

Temperatures across most of TamilNadu is expected to see a substantial reduction from today as summer takes a break

வெதர்மேன் அறிவிப்பு; தமிழ்நாட்டிற்கு கனமழை கொடுக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்னும் 5 நாட்களில் உருவாக உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இன்னும் 5 நாட்களில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நமக்கு மிகப்பெரிய பாதுகாவலாக இருக்க போகிறது. இந்த யுஏசி பரவலான மழையைக் கொடுக்கும். மேலும் இந்த காற்று கிழக்கு தமிழ்நாட்டிற்கு திரும்பும். எனவே வெப்ப அலைகள் அடுத்த 2 வாரங்களுக்கு இருக்காது.

2014 மே மாதம் இதேபோன்ற அமைப்பு தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெரும் மழையை வழங்கியது எனக்கு நினைவிருக்கிறது. இன்னும் சிறப்பான நாட்கள் நமக்கு காத்திருக்கின்றன, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

நல்ல நாட்கள்; மேலும் தமிழ்நாட்டிற்கு வானிலை ரீதியாக நல்ல காலம் பொறக்குது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

ஜெய் ஜக்கமா நல்ல காலம் பொறக்க போவது !!! உச்ச கோடை வெயில் குறைய போகுது, தமிழ்நாட்டில் நல்ல மழை வர போகுது.

நீண்ட நேரம் பெய்த இடியுடன் கூடிய மழை காரணமாக வடக்கு உள்பகுதியில் வெப்பநிலை குறையும் நேற்று ஹைதராபாத்-கடப்பா புயல் நீண்ட பயணத்திற்கு பிறகு தமிழ்நாட்டை வந்தடைந்தது. சென்னையின் சில பகுதிகளில் சாலையை நனைக்கும் வகையில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வேலூர் ஆம்பூர் பகுதிகளில் மிக கனமழை பெய்ய போகிறது.

இப்போது திருவண்ணாமலையில் மழை மேகங்கள் நகர்ந்து வருகின்றன, அங்கு மழை பெய்யும். பொதுவாக இடியுடன் கூடிய மழை 2-3 மணி நேரம் நீடிக்கும். ஆனால் இது 12 மணிநேரம் வரை நீடிக்கிறது , தமிழ்நாட்டின் உட்புறத்தில் வெப்பம் அதிகரித்து உள்ளதால் இந்த மழை இன்னும் பலம் பெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி, பெரம்பலூருக்கு இதனால் மழை பெய்யுமா என்று பார்க்கலாம், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை அறிவிப்பு; வானிலை மைய அறிவிப்பு: கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
கோடநாடு (நீலகிரி), பென்னாகரம் (தர்மபுரி) தலா 6, பையூர் AWS கிருஷ்ணகிரி), நெங்கல்
(கிருஷ்ணகிரி), பாளர் கிருஷ்ணகிரி தலா 5. ஆம்பூர் இகுப்பத்தூர்). மேலாலத்தூர் (வேலூர்).
தர்மபுரி (தர்மபுரி), தர்மபுரி PTD (தர்மபுரி, வாணியம்பாடி (திலப்பத்தூர்), நாட்றாம்பள்ளி
(திருப்பத்தூர்) தலா 4 வகேனக்கல் (தர்மபுரி), வடபுதுப்பட்டு (நிலப்பத்தூர்). உயனாமரத்தூர்
(இவைண்ணாமவை), டேனிஷ்பேட்டை (சேலம்) கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி),
கிருஷ்ணகிரி (சியஷ்ணகிரி), அவர் (தர்மபுரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கெலவரப்பள்ளி
அணை கிருஷ்ணகிரி) குடியாத்தம் (வேலூர்), கண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 3, மேட்டூர்
(சேலம்), நடுவட்டம் (நீலகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு) TCS மில் கேதாண்டபட்டி
(நிலப்பத்தூர்),எம்புவட்டப்பட்டி (கிகஷ்ணகிரி பாலவிதிர்) சேலம் (சேலம்), பாம்பார்
அணை (கிருஷ்ணகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு) தாலுகா அலுவலகம் திருப்பத்தூர்
(நிலப்பந்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்), போச்சம்பள்ளி ARG (கிஸஷ்ணகிரி),ஓமலூர்
(சேலம்), திருப்பூர் PWD (இலப்பூர்) தலா 2 மிமீ மழை பெய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+