கரூர் பரமத்தியில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் கொளுத்திய வெயில்! இனி இப்படித்தான்.. வானிலை மையம் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வெயில் படிப்படியாக அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

weather tamil nadu

நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

10 முதல் 14 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (08-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (09-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் பனி மூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கலை எதிர்கொண்டன. இனி வரும் நாட்களில் பனி மூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று சொல்லப்படுகிறது.

அதே நேரம் வெயில் அதிகரிக்கும் என்பதால், மக்கள் இதற்கு தயாராக இருக்க வேண்டும் என வானிலை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+