Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏசி விற்பனைக்கே ஆப்பு வைத்த எக்குத்தப்பான மழை.. சென்னையில் மே மாதம் குளிருமா.. செம்ம யூடர்ன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த 7ம் தேதியில் இருந்து பெய்ய தொடங்கிய மழை காரணமாக ஏசி விற்பனை சரசரவென குறைந்துள்ளது. கடந்த மாதம் முழுவதும் ஏசி விற்பனை பெரிய அளவில் உயர்ந்து இருந்தது. இந்த மாத தொடக்கத்திலும் ஏசி விற்பனை அதிகமாக இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக ஏசி விற்பனை தற்போது சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

தமிழகத்தில் கோடை வெயில் இந்த முறை மார்ச் மாதமே கடுமையாக ஆரம்பித்தது. ஏப்ரல் மாதத்தில் 100 டிகிரியை தாண்டியது.ஈரோடு, சேலம், வேலூர் , திருப்பத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தியது. மே மாதம் முதல் வாரம் கத்தரி வெயில் தொடங்கிய பின்னர் வெயில் உக்கிரமாக இருந்தது. இதனால் இந்த மாத தொடக்கத்தில் இதுவரை ஏசி வாங்காத பலரும் இஎம்ஐ போட்டாவது ஏசி வாங்கிவிட வேண்டும் என்று ஓடினார்கள். ஏசி வாங்கினால் மாட்டுவதற்கே நான்கு நாட்கள் வரை காத்திருக்க வேண்டும் என்றும், ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் சில நிறுவனங்கள் சொல்லின. அந்த அளவிற்கு ஏசி விற்பனை அதிகமாக இருந்தது.

The AC sales have dropped dramatically due to the rains in Tamil Nadu

ஆனால் மே இரண்டாவது வாரத்தில் அப்படியே நிலைமை மாறிவிட்டது. மே 7ம் தேதிக்கு பிறகு பெய்யத் தொடங்கிய மழையால் வெப்பம் தணிய தொடங்கியது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே கோடை மழை பெய்ததால் அந்த மாவட்டங்களில் காலநிலை மாறியது. இந்த மழை தற்போது மாநிலம் முழுவதும் பெய்து கோடையை குளிர்வித்துள்ளது.

சென்னையிலும், புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னையில் ஏசி போடுவதையே மக்கள் குறைத்துவிட்டார்கள்.. தமிழ்நாட்டில் மார்ச் ஏப்ரலில் வெயிலின் கொடூரத்தை பார்த்த மக்கள் தற்போது பெய்யும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது கோடை மழையா அல்லது பருவமழை என்கிற அளவிற்கு மழை பெய்துள்ளது.

தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இன்னும் சில நாட்களுக்கு இதே போல் மழைக்கான வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில்16 செ.மீ. கொட்டியது. மழை காலமாக வெயில் காலமாக என்று கேட்கும் அளவிற்கு தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்துகொண்டே இருந்தது. இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு 2 மணி அளவில் தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரையில் பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை வெளுத்து பெய்தது.

இதேபோல் நீலகிரி, நாகை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கடலூர், தேனி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏசி வாங்கும் எண்ணத்தை மக்கள் தள்ளிப்போட்டுள்ளனர்.கடந்த வாரம் வரை ஏசி வாங்க ஆர்வம் காட்டி வந்த மக்கள், இன்னும் இரண்டு வாரம் சமாளித்தால் போதுமே எதற்காக ஏசி வாங்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.. தமிழகத்தில் மின் தேவையே 21 ஆயிரம் வாட்டில் 17 ஆயிரம் வாட் என்கிற அளவில் சரிந்துள்ளது..

மக்களிடையே ஏசி வாங்கலாம் என்ற எண்ணமே தற்போது குறைந்துவிட்டது. மீண்டும் மழை குறைய குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்பதால் அதன்பிறகே மக்கள் வெயிலின் தாக்கத்தை உணர வாய்ப்பு உள்ளது. அதற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் நிச்சயம் அற்புதமாக இருக்கும்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+