Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரலாறு கண்டதில்லை.. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ஒரே நாளில் 35 செமீ மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 35 செமீ மழை கொட்டித்தீர்த்துள்ளது. இது சராசரியை விட மிக அதிகம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேகவெடிப்பு காரணமாக இத்தகைய பெருமழை பெய்வதாக வானிலை மையம் கூறியுள்ள நிலையில், இந்த கனமழையால் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள காரணத்தால், ராமநாதபுரம், ராமேசுவரம், பாம்பனில் 2-வது நாளாக நேற்றும் கனமழை கொட்டியது. இதனால் தெருக்களில் எல்லாம் தண்ணீர் புகுந்த காரணத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 41 செ.மீ. மழை கொட்டியது. இதே போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று முன்தினம் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் ராமேசுவரத்தில் நேற்று காலை மழை பெரிய அளவில் இல்லை.. ஆனால் மீண்டும் காலை 10 மணி முதல் மழை பெய்யத்தொடங்கியது. மதியத்தின் போது எல்லாம் பலத்த மழையாக மாறியது. அதன்பின்னர் மீண்டும் சாரல் மழை பெய்தது.

weather ramanathapuram rameshwaram

தொடர் கனமழையால் ராமேசுவரத்தில் பஸ் நிலையம் பகுதி, ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள சாலை, நகராட்சி சுங்கச்சாவடி அமைந்துள்ள சாலை உள்பட நகரின் பல்வேறு தாழ்வான இடங்களிலும் மழைநீர் சூழ்ந்திருக்கிறது. அதேபோல் தாழ்வான பகுதிகளை எல்லாம் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் பகுதியிலும் நேற்று மிக கனமழை பெய்தது. கனமழை காரணமாக தோப்புக்காடு, சின்னப்பாலம், தெற்குவாடி, நடுத்தெரு உள்ளிட்ட ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்த மக்கள் பாம்பனில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்கள்.

இதனிடையே வீடுகளை சூழ்ந்த மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனமழை பெய்த காரணத்தால் பள்ளிகளுக்கு மதியத்திற்கு மேல் விடுமுறை விடப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 35 செமீ மழை கொட்டித்தீர்த்துள்ளது. இது சராசரியை விட மிக அதிகம் என்றும் மேகவெடிப்பு தான் காரணம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பாம்பனை தொடர்ந்து தொண்டியில் 11 செமீ மழை பெய்துள்ளது. அதேநேரம் கனமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக உள்ளதாகவும், இது புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது என்றும் இதன் காரணமாக வரும் திங்கள்கிழமை முதல் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக டெல்டா, தென் மற்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் திருநெல்வேலி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (சனிக்கிழமை) பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

அதன் தொடர்ச்சியாக நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், அதற்கு அடுத்த நாள் (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று தெற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும். அதன் பின்னர் 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட இலங்கை-டெல்டா மாவட்டங்களுக்கு இடையே நகரக்கூடும். அது அங்கு 24 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை அதே பகுதியில் நிலவக்கூடும். அது தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. இதன் காரணமாக சென்னை முதல் ராமேசுவரம் வரையிலான கடலோரப் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்

இதனைத்தொடர்ந்து 25-ந்தேதி மாலையில் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கி, 26, 27 (புதன்கிழமை) மற்றும் 28 (வியாழக்கிழமை)-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் பருவமழை பரவலாக தீவிரம் அடைந்து மிக கனமழை வரை பெய்யக்கூடும் . சில நேரங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்பு உள்ளது" என்று சென்னை வானிலைஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறி சென்னைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவானால் அதற்கு "பெங்கல்'' என பெயரிடப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+