பைக் எல்லாம் மூழ்குதே.. தாம்பரத்தை தடுமாற வைத்த திடீர் மழை.. வீடியோவை நீங்களே பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் தாம்பரம் சேலையூரில் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது . இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

சென்னையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை இயல்பைவிட அதிக அளவில் பெய்துள்ளது. இந்த மழை காரணமாக தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, ஓஎம்ஆர் சாலைகள், சோழிங்க நல்லூர், பெருங்குடி, மடிப்பாக்கம், சேலையூர், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்குவதும். சாலைகள் சேதம் அடைவதும் இயல்பான ஒன்றாக மாறி வருகிறது.

the road in Tambaram Selaiyur was flooded due to rain: see the Video footage

மழை வெளுத்து வாங்கும் போதெல்லாம் இந்த பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை நீர் வடிகால்கள் குறைவு மற்றும் பள்ளமான பகுதிகள் என்பால் ஒரு பெரிய மழைக்கே சாலைகள் தண்ணீரில் மிதக்க தொடங்கிவிடும். தண்ணீர் வடிய சில நாட்களே ஆகும்.

இந்த சூழலில் தென் சென்னை மற்றும் தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் கனமழை பெய்தது. மழை காரணமாக பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் சில இடங்களில் மழை நீர் உடனே வெளியேற வழி இல்லாததால் வெள்ளக்கடாக காட்சி அளித்து

the road in Tambaram Selaiyur was flooded due to rain: see the Video footage

தாம்பரம் சேலையூர் பகுதியில் சாலைகளில் மழைநீர் வடிய வேண்டிய வழிகள் மூடிக்கிடந்த காரணத்தால் வெள்ளம் பெரிய அளவில் தேங்கியது. பைக்குகளை பாதிக்கும் மேல் தண்ணீரில் மூழ்கியடி இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்ட முடியாமல் அவதிப்பட்டனர்.

ஒருபக்கம் கனமழை என்றால் மறுபக்கம் தண்ணீர் தேங்கி நின்றதால் நீண்ட நேரம் வாகனங்கள் சாலைகளில் தடுமாறியபடி மிக மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனிடையே தாம்பரம் சேலையூர் பகுதியில் வெள்ளத்தில் மிதந்த சாலையின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+