நெல்லையில் பொத்துக்கிட்டு ஊத்தும் வானம்! அதீத மழையால் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல தடை
சென்னை: நெல்லையில் சொரிமுத்து அய்யனார் கோயிலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் அகஸ்தியர் அருவியிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடதமிழகத்தை டிசம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளம் பாதித்தது. இப்போது தென் தமிழகத்தை புரட்டி போட்டு வருகிறது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்ளில் கனமழை பெய்து வருகிறது.

நெல்லை, கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்து வரும் நிலையில் பாபநாசம், காரையார், மணிமுத்தாறு போன்ற அணைகள் நிரம்பி வருகின்றன.
ஆங்காங்கே நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் ஊருக்குள் தேங்கியுள்ளது. தென்காசியில் தேங்கிய மழைநீரில் மக்கள் நீச்சல் அடித்து விளையாடி வருகிறார்கள். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரெட் அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
மின்கம்பங்கள் அருகே செல்ல வேண்டாம். நீர் நிலைகளில் இறங்க வேண்டாம். மழை பாதிப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 1077 என்ற எண்ணுக்கு அளிக்கலாம் என ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். காரையார், மாஞ்சோலை போன்ற மலை பகுதிகளிலும் அதீத மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி பாபநாசம் அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறக்கப்படுகிறது. வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அது போல் மணிமுத்தாறு, தாமிரபரணி போன்ற ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாளையங்கோட்டையில் மனக்காவலம் பிள்ளை நகரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்துவிட்டது.
மேலும் ஆற்றின் கரையோரதில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அது போல் பெருமாள்புரம் என்ஜிஓ காலனி பகுதியிலும் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து கொண்டது. இதனால் அந்த பகுதி மக்கள் வெளியே வர முடியாத நிலைக்கு வந்துவிட்டனர். இந்த நிலையில் நெல்லையில் கனமழை காரணமாக காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில், அகஸ்தியர் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications