கனமழை.. சென்னைக்கு ஏதும் சான்ஸ் இருக்கா? அடுத்த சில நாட்கள் எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இரவில் பெய்த மழையால் தூத்துக்குடி வெள்ளக்காடான நிலையில், மழை நீடிக்குமா? சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டு உள்ளார்.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது. கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி மற்றும் குமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியது.

தூத்துக்குடியில் கொட்டித் தீர்த்த கனமழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் என்பது மிக கடுமையான அளவுக்கு உள்ளது. ஏப்ரல்-மே மாதங்களில் உக்கிரம் காட்டும் வெயில் தற்போது மார்ச் மாதத்திலேயே தகிக்க தொடங்கிவிட்டது. பகல் நேரத்தில் வெளியே போகவே அச்சப்படும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியது.
ஆனால் வெயிலில் நின்று விட்டு சட்டென்று ஏசி அறைக்குள் போனால் எப்படி இருக்குமோ அதைப்போல ஒரு உணர்வை கொடுத்தது. வானிலை மையம் கணித்தபடியே தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடியில் நள்ளிரவு கனமழை பெய்தது. விடிய விடிய பெய்த மழையால் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. வெயிலுக்கும் நடுவே திடீரென்று பெய்த மழையால் மக்கள் மனம் குளிர்ந்தது.
சென்னையில் எப்படி இருக்கும்
இதனிடையே, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப நிலை குறைந்தே இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் உட்புறப் பகுதிகளில் மழையை கொண்டு வரும். கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
பெங்களூரிலும் மழை பெய்யும். அடுத்த சில நாட்களுக்கு உள் தமிழகம் மற்றும் தெற்கு மாவட்டங்களில் வெப்ப நிலை குறையும். கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் ஈரப்பதம் நீடிக்கும். வெப்ப நிலை 33-35 டிகிரி வரை இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications