இன்று இபி பில் கட்ட போறீங்களா? "இவங்களுக்கு" அவசியம் இல்லை.. தங்கம் சொன்ன தங்கமான அறிவிப்பு!
சென்னை: கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் மின் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் இன்று மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய சில மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கட்டணத்தை செலுத்த வேண்டியது இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் . தங்கம் தென்னரசு இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

புயல்: அதில், கடந்த 03.12.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவெடுத்து 04.12.2023 அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 3 தினங்களாக மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.
செலுத்த வேண்டாம்: இது குறித்து, மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
1. மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 04.12.2023 முதல் 07.12.2023 வரை இருந்த நிலையில், மேற்காணும் சூழலின் காரணமாக அபராதத் தொகை இல்லாமல் 18.12.2023 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
2. ஏற்கனவே, மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் 04.12.2023 முதல் 06.12.2023 வரை அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும். இவ்வாறு மாண்புமிகு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை
அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று செலுத்த வேண்டாம்: அதன்படி 07.12.2023 தேதி இன்று கட்டணம் செலுத்த வேண்டுபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. 18ம் தேதி செலுத்தினால் போதும்.
மின்சார தடை; சென்னையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. ஆனால் இன்னும் மழை காரணமாக நிறுத்தப்பட்ட மின்சாரம் சரி செய்யப்படவில்லை. பல இடங்களில் இன்னும் வெள்ளம் விடியவில்லை. சென்னையில் வெள்ளம் இருப்பதால் உடனுக்குடன் மின்சாரம் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு சாலையாக தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்சார வயர்கள் சாலைக்கு கீழே உள்ளன. அண்டர்கிரவுண்ட் வயர்கள் சேதம் அடைந்துள்ளதா.. சாலையில் குழிகள் ஏற்பட்டு உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் .இதை பார்க்காமல்.. அப்படியே மின்சாரம் தர முடியாது. இதற்கு முதலில் தண்ணீர் வடிய வேண்டும். இதற்காக தெரு தெருவாக சோதனை செய்து படிப்படியாக மட்டுமே மின்சார வழங்கப்பட்டது.
துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொது மக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது, பொது மக்கள் இந்த அசாதாரணமான சூழலை புரிந்து கொண்டு மின் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications