Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளத்தில் மிதந்த ஏரல்.. எதற்கும் உதவாமல் போன பொருட்கள்.. பல கோடி நஷ்டம்.. வியாபாரிகள் வேதனை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: மழை வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் நகரத்தை புரட்டி போட்டுள்ளது. கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அனைத்தும் சேதமாகி விட்டது என்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வியாபாரத்திற்காக வாங்கி வைத்த பொருட்கள் எதற்கும் பயன்படாமல் போனதால் பலகோடி நஷ்டமாகி விட்டதாக வியாபாரிகள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த 17ம் தேதி அதிகாலை முதல் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு அதிகப்படியான நீர்வரத்து வந்ததால் தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

Thoothukudi Eral flood Millions of losses Traders are in agony

இத்துடன் காட்டாற்றுப் பகுதிகளில் இருந்து ஓடி வந்த வெள்ள நீரும், சிற்றாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.

தாமிரபரணி கரை ஓரம் உள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல இடங்கள் தண்ணீரில் மிதந்ததால் தனித்தீவாக காட்சியளித்தது. சாலைகள், வீடுகள், விவசாய நிலங்கள் என திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளம். தாமிரபரணி ஆற்றில் கலந்த வெள்ளநீர் மருதூர் அணைக்கட்டு வழியாக ஸ்ரீவைகுண்டம், ஏரல் வழியாக புன்னக்காயல் முகத்துவாரத்திற்கு சென்று வங்கக் கடலை சென்றடைந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், அகரம், பால்குளம், குரும்பூர், சோனகன்விளை, அம்மன்புரம் உள்ளிட்ட 1000த்திற்கும் மேற்பட்ட ஊர்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.

தூத்துக்குடி மாநகரிலும் எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் மழை நீர் சூழ்ந்து நிற்பதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். சில இடங்களில் படகுகள் மூலம் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால் ஏரல் தாமிரபரணி ஆற்றுப் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ஏரலுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அங்கு மின்சார வசதியும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி துண்டிக்கப்பட்டது. செல்போன் சேவையும் செயல் இழந்தது. இதனால் மீட்பு பணிக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கிருந்த வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டார். கடும் வெள்ளம் காரணமாக அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டார். 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டார் அனிதா ராதாகிருஷ்ணன்.

வெள்ள நீர் வடிந்த பின்னர் பல ஊர்கள் சேரும் சகதியுமாக மாறியுள்ளன. வனிக நகரமான ஏரல் பெருமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உருக்குலைந்து போயுள்ளது. வீடுகளை இழந்து மக்கள் தவிக்கும் நிலையில் கடைகளில் உள்ள பொருட்கள் சேதமானதால் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்

மழை வெள்ளத்தில் ஏரல் நகரம் மிதந்ததால் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அனைத்துப் பொருட்களும் நனைந்ததால் எதற்கும் உதவாது என்று வியாபாரிகள் வெளியே கொட்டி உள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்காக கடந்த மாதமே பொருட்களை வாங்கி கடைகளில் ஸ்டாக் வைத்திருந்தனர் விவசாயிகள். இந்த நிலையில் திடீர் மழை வெள்ளப்பெருக்கினால் அனைத்தும் சேதமாகியுள்ளது.

வெள்ளத்தால் சேதமான பொருட்களை வீதிகளில் கொட்டி வைத்துள்ளனர். பல கோடி நஷ்டமாகி விட்டது என்று கூறும் வியாபாரிகள் என்ன செய்வதென்றே தெரியவில்லை எங்களின் வாழ்வாதாரமே போய் விட்டது என்று சோகத்துடன் கூறியுள்ளனர். உடமைகளையும், பொருட்களையும் இழந்து தவிக்கும் தங்களுக்கு அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பது வியாபாரிகளின் கோரிக்கையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+