வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.. 3 நாட்களுக்கு பின் பத்திரமாக மீட்பு
தூத்துக்குடி: ஏரல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பேரிடர் மீட்பு படையினர் மீட்டுள்ளனர். தனது சொந்த ஊரில் வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களுக்கு உதவி செய்யப்போய் வீட்டிற்குள் மாட்டிக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 16ஆம் இரவு முதல்18 ஆம் தேதி இரவு வரை கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எந்த விட அடிப்படை வசதிகளும் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர்களும், எம்.பி, எம்எல்ஏக்கள், மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர். தற்போது வரைக்கும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது இல்லத்தில் இருந்து வெளியே வர இயலாதபடி சிக்கித் தவித்தார். 3 நாட்களாக தனது வீட்டிலேயே சிக்கியிருந்த நிலையில், அவரை காவல்துறை அதிகாரிகள், மீட்புப் படையினர் இன்று மீட்டனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக சொந்த ஊர் சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு மாட்டிக்கொண்டு 3 நாட்களாக சிக்கித் தவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications