மீண்டும் மழை.. மிக கவனம் மக்களே.. நெல்லை கலெக்டர் வார்னிங்
திருநெல்வேலி: வெள்ள நீர் வடியாத நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று மதியம் முதல் மழை பெய்யக்கூடும் என்றும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கார்த்திக்கேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் இரண்டு நாட்களில் 110 செமீ மழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூரில் 90 செமீ மழை பதிவானது.

நெல்லை மாவட்டத்திலும் மூலைக்கரைப்பட்டியில் 80 செமீ மழை பதிவானது. ஒரே நாளில் கொட்டிய மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். நெல்லை மாவட்ட அலுவலகம், மாவட்ட அறிவியல் மையம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலகம், பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம், நெல்லை ஆர்டிஓ அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்த ஊழியர்கள் நேற்று காலை படகு மூலம் வெளியேற்றப்பட்டனர்.
நெல்லை சந்திப்பு பஸ் ஸ்டாண்ட், கொக்கிரகுளம், சிந்துபூந்துறை, கைலாகபுரம், மீனாட்சிபுரம் பகுதிகளிலும் வெள்ள நீர் வடிந்து வருகிறது. நெல்லையில் பெய்த கனமழைக்கு குலவணிகர்புரத்தில் வீடு இடிந்து விழுந்து ஒருவர் உட்பட நேற்று வரை மூவர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் நெல்லை சந்திப்பில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் ஒருவர் இன்று காலை பிணமாக மீட்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று மதியம் முதல் மழை பெய்யக்கூடும்
— District Collector, Tirunelveli (@Collectortnv) December 19, 2023
பொதுமக்கள் கவனமாக இருக்கவும். நீர் தேங்கி உள்ள இடங்கள், மின்கம்பங்கள், சேதமடைந்த கட்டிடங்கள், மரங்களின் அருகில் செல்வதை தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது#Tirunelveli #Rains https://t.co/ZRnPympYGG
இதன் மூலம் வெள்ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கன மழை காரணமாக இன்று 2வது நாளாக பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை.
நேற்றிரவு முதல் மழை ஓய்ந்தது. இன்று காலை முதல் லேசான வெயில் தலை காட்டி வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை அமைச்சர்களும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே திருநெல்வேலியில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திக்கேயன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இன்று மதியம் முதல் மழை பெய்யக்கூடும் என்றும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கார்த்திக்கேயன். நீர் தேங்கி உள்ள இடங்கள், மின்கம்பங்கள், சேதமடைந்த கட்டிடங்கள், மரங்களின் அருகில் செல்வதை தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும் ஆட்சியர் கார்த்திக்கேயன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலை, வடக்கு பைபாஸ் சாலையில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடியதால் அந்த சாலை வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் இதனிடையே நேற்றிரவு முதல் மழை ஓய்ந்தது. தாமிரபரணியில் வெள்ள நீரின் வேகம் சற்றே தணிந்துள்ளது.
இன்று காலை முதல் லேசான வெயில் தலை காட்டி வருகிறது. வெள்ளம் வடிந்தாலும் வீதிகளிலும் வீட்டிற்குள்ளும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதிலிருந்து மீண்டு வருவதற்கு மாதக்கணக்கில் ஆகும் என்று நெல்லை மாவட்ட மக்கள் கவலையடைந்துள்ளனர்.
மீண்டும் மழை பெய்யக்கூடும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளதால் மக்களின் அச்சம் அதிகரித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்கு போறீங்களா! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications