மஞ்சள், ஆரஞ்சு அலர்ட்.. கொட்டி தீர்த்த மழை! கடந்த 24 மணி நேரத்தில் எங்கு அதிகம்? விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை தீவிரமெடுத்திருக்கிறது. மழை காரணமாக பல்வேறு மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர். இந்நிலையில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரங்களும் வெளியாகியுள்ளது.
இந்த 5 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. இம்மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

- திருவள்ளூர்
- வேலூர்
- தென்காசி
- திருநெல்வேலி
- கன்னியாகுமரி
என 5 மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை பொறுத்த வரையில், "
ஆற்காடு (ராணிப்பேட்டை) 15 செ.மீ,
அரக்கோணம் (ராணிப்பேட்டை) 12 செ.மீ,
கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), திருத்தணி (திருவள்ளூர்) தலா 10,
ராணிப்பேட்டை (ராணிப்பேட்டை), செங்குன்றம் (திருவள்ளூர்) தலா 8 செ.மீ,
வாலாஜா (ராணிப்பேட்டை) 7 செ.மீ,
கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), சோழவரம் (திருவள்ளூர்), திருத்தணி PTO (திருவள்ளூர்), சோளிங்கர் (ராணிப்பேட்டை), திருத்தணி AWS (திருவள்ளூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), மண்டலம் 01 விம்கோ நகர் (சென்னை), மண்டலம் 02 D15 மணலி (சென்னை) தலா 6 செ.மீ,
குடியாத்தம் (வேலூர்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை), மின்னல் (ராணிப்பேட்டை), R.K.பேட்டை ARG (திருவள்ளூர்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), மேலாலத்தூர் (வேலூர்), புழல் ARG (திருவள்ளூர்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), மண்டலம் 03 புழல் (சென்னை), விழுப்புரம் (விழுப்புரம்), மண்டலம் 01 எண்ணூர் (சென்னை), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி) தலா 5 செ.மீ,
DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), DSCL விருகாவூர் (கள்ளக்குறிச்சி), பூண்டி (திருவள்ளூர்), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), கள்ளக்குறிச்சி ARG (கள்ளக்குறிச்சி), DSCL கீழ்படி (கள்ளக்குறிச்சி), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), தாம்பரம் (செங்கல்பட்டு). ராணிப்பேட்டை AWS (ராணிப்பேட்டை), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 4 செ.மீ,
RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), தர்மபுரி PTO (தர்மபுரி), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), அம்பத்தூர் (Rev) (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), கடலூர் (கடலூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), DSCL தியாகதுர்க்கம் (கள்ளக்குறிச்சி), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), தேவாலா (நீலகிரி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), DSCL திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), ஆரணி (திருவண்ணாமலை), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), SCS மில் திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), மண்டலம் 07 அயப்பாக்கம் (சென்னை), கமண்டலம் 07 கொரட்டூர் (சென்னை), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), RSCL அரசூர் (விழுப்புரம்), DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), BASL முகையூர் (விழுப்புரம்) தலா 3 செ.மீ,
மரக்காணம் (விழுப்புரம்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), KCS மில்-2 கச்சிராப்பாளையம் (கள்ளக்குறிச்சி), திருவள்ளூர் (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம்-REV (திருவள்ளூர்), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), KCS மில்-2 மூரர்பாளையம் (கள்ளக்குறிச்சி), போளூர் (திருவண்ணாமலை), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), சேலம் (சேலம்), செய்யார் (திருவண்ணாமலை), RSCL-2 கெடார் (விழுப்புரம்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), மண்டலம் 08 அண்ணாநகர் மேற்கு (சென்னை), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), செஞ்சி (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்), பொன்னை அணை (வேலூர்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), RSCL வல்லம் (விழுப்புரம்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), பாகூர் (புதுச்சேரி), வடகுத்து (கடலூர்), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), வேலூர் (வேலூர்) தலா 2 செ.மீ,
பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), தர்மபுரி (தர்மபுரி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு). புதுச்சேரி டவுன் (புதுச்சேரி), கள்ளக்குறிச்சி AWS (கள்ளக்குறிச்சி), வானூர் (விழுப்புரம்), செய்யூர் (செங்கல்பட்டு), திருப்போரூர் (செங்கல்பட்டு), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), வனமாதேவி (கடலூர்), SCS மில் பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), எடப்பாடி (சேலம்), அம்முண்டி (வேலூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), அவலாஞ்சி (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), செங்கம் (திருவண்ணாமலை), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), காட்பாடி (வேலூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), ஜெயா பொறியியல் கல்லூரி AWS (திருவள்ளூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), செருமுள்ளி (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), திருக்கண்ணூர் (புதுச்சேரி), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை). திருவண்ணாமலை AWS (திருவண்ணாமலை), செய்யூர் ARG (செங்கல்பட்டு), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), மண்டலம் 14 மேடவாக்கம் (சென்னை), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), பொன்னேரி (திருவள்ளூர்), குந்தா பாலம் (நீலகிரி) தலா 1 செ.மீ என மழை பதிவாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications