அடுத்த 3 மணி நேரத்துக்கு.. சென்னை உள்பட தமிழகம் முழுக்க 26 மாவட்டங்களில் மழை விடாது.. வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை விடாமல் வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை, தேனி, விருதுநகர், கோவை, திருச்சி என தமிழகம் முழுக்க 26 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் தமிழகத்தில் திருச்சி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கரூர், கோவை, ஈரோடு என பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை கொட்டியது. இன்றும் திருச்சி, தேனி, தென்காசி உள்பட பல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை கொட்டியது.

26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட தமிழகம் முழுக்க 26 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 10 மணி வரை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருச்சி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, அரியலூர், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மழை அளவு செமீ
* ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) 18,
* மண்டலம் 02 மணலி புதுநகரம் (W 18) (சென்னை) 13.
* குருவாடி (அரியலூர்) 10,
* எண்ணூர் AWS (திருவள்ளூர்), மண்டலம் 07 கொரட்டூர் (W 84) (சென்னை), மண்டலம் 05 பாரிமுனை (சென்னை) தலா 9.
* டிஜிபி அலுவலகம் (சென்னை), மண்டலம் 07 கொரட்டூர் (W 85) (சென்னை), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை) தலா 8,
* கங்கவல்லி (சேலம்), மண்டலம் 02 மணலி (W 18) (சென்னை), மண்டலம் 07 அயப்பாக்கம் (சென்னை), மின்னல் (ராணிப்பேட்டை), ஜெயா பொறியியல் கல்லூரி AWS (திருவள்ளூர்). மஞ்சளாறு (தஞ்சாவூர்) தலா 7,
* பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), கல்லணை (தஞ்சாவூர்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) தலா 6.
* தலைவாசல் (சேலம்), கும்பகோணம் (தஞ்சாவூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), அம்முண்டி (வேலூர்), ACSமருத்துவக்கல்லூரி ARG (காஞ்சிபுரம்), திருப்பத்தூர் (சிவகங்கை), மண்டலம் 08 அண்ணாநகர் மேற்கு (சென்னை), மண்டலம் 06 கொளத்தூர் (சென்னை), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), டேனிஷ்பேட்டை (சேலம்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), இலுப்பூர் (புதுக்கோட்டை), பூந்தமல்லி (திருவள்ளூர்), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி) தலா 5 செமீ மழை பெய்துள்ளது.
இன்று எங்கெல்லாம் கனமழை கொட்டும்
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை எத்தனை மாவட்டங்களில்
நாளை (செப்.18ம் தேதி) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23 ஆம் தேதி வரை மழைக்கு சான்ஸ்
செப்.19ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
செப்.19ம் தேதி மற்றும் 21ம் தேதிகளில் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்.22ம் தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்.23ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்றும் நாளையும் மழை தான்
இன்று (17-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (18-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications