இன்றும் மழை வெளுக்கும்.. 2 நாள் தான்.. மீண்டும் சூடுபிடிக்கும் வெயில்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று மற்றும் நாளை என 2 நாள்கள் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (மார்ச் 14)
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 15 மற்றும் மார்ச் 16 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும், இன்று மற்றும் நாளை இரு நாட்கள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். வரும் 15, 16, 17-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Weather tamil nadu chennai

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளிலிருந்து தெற்கு கேரளா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

நாளை 15, நாளை மறுநாள் 16 ஆம் தேதிகளில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 17 ஆம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும், 18, 19 ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 9 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுர்க்கத்தில் 7 செ.மீ., கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 6 செ.மீ., திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருப்பூர் மவாட்டம் குண்டடம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+