"மேஜிக் வானிலை.." நின்னு பெய்யும் கனமழை.. 90% மாவட்டங்களில் சம்பவம் காத்திருக்கு.. வெதர்மேன் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த காலமாகவே நல்ல மழை பெய்து வந்தது. இருப்பினும், தென் இந்தியாவில் மழை சற்று குறைவாகவே இருந்தது. கேரளாவில் பருவமழை சுமார் 50% குறைவாகப் பெய்தது.

தமிழ்நாட்டிலும் கூட பெரும்பாலான நாட்களில் மழை இல்லாமல் வறண்ட வானிலை தான் இருந்தது. வானிலை மைய இயக்குநரும் கூட தமிழ்நாட்டில் இயல்பைக் காட்டிலும் மழை குறைவாகவே பெய்ததாகக் கூறியிருந்தார்.
தமிழ்நாடு வெதர்மேன்: இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் வானிலை வெகுவாக மாறியுள்ளது. மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மழை கொட்டும் அளவுக்கும் இருக்கிறது.
இதற்கிடையே வரும் நாட்களில் அங்கே வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழ்நாட்டில் இன்று சுமார் 90% மாவட்டங்களில் மழை பெய்யும் எனக் குறிப்பிட்ட அவர், சென்னையில் கிளைமேட் எப்படி இருக்கும் என்பதையும் விளக்கியுள்ளார்.
மழை எங்கே: இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "கடந்த 2 நாட்கள் தமிழகத்தில் வானிலை மேஜிக் போலவே இருக்கிறது.. இன்றும் கூட சுமார் 90% மாவட்டங்களில் மழை பெய்யும்.. சில இடங்களில் மழை நின்று பெய்யும். திருச்சி, பெரம்பலூர், சேலம், அரியலூர், மதுரை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் நல்ல மழை பெய்கிறது.. தூத்துக்குடியிலும் விரைவில் மழை கொட்டும். இந்தப் பட்டியலில் விரைவில் சென்னையும் சேரும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை வானிலை மையம் எந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பது குறித்த செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது. அதில் "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும்.
வானிலை: அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சிராப்பள்ளி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல நாளை மறுநாள் ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications