பேய் மழை வெளுக்கப் போகுது.. குடையை மறக்காதீங்க மக்களே! 8 மாவட்டங்கள் தான் டார்கெட்டே.. மெட் அப்டேட்!
சென்னை: இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக, இன்று காலை 10 மணி வரை ராமநாதபுரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விடை கொடுத்த நிலையில், வடகிழக்கு பருவமழை கடந்த மாத இறுதியில் தொடங்கியது. அக்டோபர் இறுதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரமான நிலையில் நவம்பர் மாத முதல் இரு வாரங்களில் சற்று மந்தமான நிலையில் உள்ளது.

கடலோர மாவட்டங்களில் மட்டும் வெப்பச் சாலனம் காரணமாக மழை பெய்து வரும் நிலையில் பருவ மழை பெறவேண்டிய உள் மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமாகும் அறிகுறிகள் தென்பட தொடங்கி இருக்கிறது.
வடகிழக்கு பருவமழை
தென்சீனா கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கிழக்குப் பகுதியில் இருந்து வீசும் காற்று ஆகியவை வடகிழக்கு காற்றாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதை அடுத்து இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை
தற்போது வரை ஏறக்குறைய 2 சென்டிமீட்டர் மழை மட்டுமே கிடைத்திருக்கும் நிலையில் வரும் நாட்களில் 80 செ.மீ. என்ற வழக்கமான டார்கெட் எட்டப்படும் என்கிறனர் வானிலை ஆய்வாளர்கள். இந்த நிலையில் இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வானிலை முன்னறிவிப்பு
இன்று முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, இன்று காலை 10 மணி வரை ராமநாதபுரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
17ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications