அது நேரா நம்மள தான் பாக்குது! பேயாட்டம் ஆட போகுது மழை! ஹை அலர்ட்டில் ’இரு’ மாவட்டங்கள்! கவனம் மக்களே
சென்னை: தமிழகத்தில் மழையின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் இன்று நீலகிரி மற்றும் கோவையில் அதி கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மிகுந்த உச்சத்தில் இருக்கும். அப்போதெல்லாம் வெயில் கொளுத்தி எடுக்கும் என்பதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவார்கள். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் வெயில் உச்சம் தொட்ட நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஜூன் மாதத்தில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்தது. குறிப்பாக மதுரை, சென்னை ஆகிய பகுதிகளை அதிகபட்ச வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஜூன் மாதத்திற்கு பிறகு அதாவது தமிழில் ஆடி மாதத்தில் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அதற்கு பிறகு மழையின் தாக்கம் தொடங்கும் தற்போது அவ்வப்போது பலத்த காற்று வீசி வந்தாலும் தென் மாவட்டங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று நீலகிரி மற்றும் கோவையில் அதி கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம். திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
-
கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை.. சென்னைக்கும் அலர்ட் -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications