கேப் விடாமல் கொட்ட போகுது மழை.. இந்த 11 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு சில் கிளைமேட் தான் போங்க!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் சற்று குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்பெல்லாம் மே மாதம் தான் தமிழகத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், இப்போது கடந்த சில ஆண்டுகளாக நிலைமை மாறி மார்ச் ஏப்ரல் மாதங்களிலேயே வெப்பம் உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் வெளியே செல்லும்போது மிகவும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

மழை இருக்கு
கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் சூழலில், இடையில் மாவட்டத்தில் ஓரிரு பகுதிகளில் லேசாக மழையும் பெய்கிறது. இதனால் அந்தப் பகுதிகளில் வெப்பம் சற்று குறைகிறது. அதீத வெப்பம் படுத்தி எடுத்து வரும் சூழலில், இந்த திடீர் வானிலை மாற்றம் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவே அமைகிறது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
11 மாவட்டங்கள்
இரவு 7 மணி வரை திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த மழையால் சாலைகளில் நீர் தேங்கவும் டிராபிக் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று ஆபீஸில் இருந்து கிளம்புவோர் அதற்கேற்பத் திட்டமிட்டுக் கொள்வது சரியாக இருக்கும். ஒரு பக்கம் வெயில் படுத்தி எடுத்து வரும் சூழலில், இந்த மழை வெப்பத்தை ஓரளவுக்குக் குறைக்க உதவுகிறது.
தமிழ்நாடு கிளைமேட்
நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 9 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டிருந்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையம், திருவண்ணாமலை மற்றும் வேலூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. சென்னையில் வெளியே சென்றாலே வியர்க்கும் அளவுக்குச் சூழல் இருக்கும் நிலையில், சென்னை ஏன் இந்த லிஸ்டில் இல்லை என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். கடலோர மாவட்டங்களில் ஈரப்பதம் சேர்வதால், பதிவாகும் வெப்பத்தை விட நாம் உணரும் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனாலேயே உள்மாவட்ட வெப்பத்தையும் கடலோரப் பகுதிகளின் வெப்பத்தையும் ஒப்பிட முடியாது.
வானிலை மையம்
முன்னதாக வரும் நாட்களில் நிலவும் வானிலை குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டலக் கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது, இதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் ஏப்ரல் 23 முதல் 27 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று வானிலை மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வெயில் கொடுமை! உடல் சூட்டை தணிக்கும் 5 அற்புத உணவுகள்! இளநீர் குடிக்கும் போது அந்த தவறை செய்யாதீங்க! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications