மிதக்கும் நெல்லை ரயில் நிலையம்.. கேன்சல் ஆன ரயில்கள்.. ரயில்வே வெளியிட்ட மேஜர் அறிவிப்பு
நெல்லை: நெல்லை - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் இரு மார்க்கமாகவும் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதுபோக மற்றொரு முக்கிய தகவலையும் சொல்லியிருக்கிறது.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளம் மற்றும் பிளாட்பாரம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. அதேபோல், நெல்லை சந்திப்பு - தாழையூத்து இடையே தண்டவாளத்தில் கீழ் உள்ள ஜல்லி கற்களை மழை வெள்ளம் அடித்து சென்றது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 3 குளங்கள் உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தண்டவாளம் கீழ்ப்பகுதி ஜல்லி மற்றும் மண் அரித்து செல்லப்பட்டது.

தற்போது மழை விட்டுள்ளதால் தண்டவாளத்தை சீர் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நெல்லைக்கு ரயில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மழை வெள்ளத்தை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதனால், மறு அறிவிப்பு வரும் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் புறப்படாது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
இதனால், ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கத்திலும் நாளை முற்றிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது தவிர திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் கோவில்பட்டியில் இருந்து இயக்கப்பட உள்ளது.
நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையிலிருந்து இயக்கப்படும். மதுரை - நெல்லை இடையேயான ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையில் இருந்து புறப்பட்டு செல்லும். அதேபோல் தூத்துக்குடி - சென்னை ரயில் மதுரையிலிருந்து புறப்படும். புனலூர் - மதுரை இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் ரயில் நாகர்கோவில் - மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து புனலூருக்கு புறப்பட்டு செல்லும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications