தூத்துக்குடியை புரட்டிப்போட்ட கனமழை.. மூன்றரை மணி நேரத்தில் 7 செமீ மழை பதிவு.. சாலைகளில் வெள்ளம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் இன்று அதிகாலை மூன்றரை மணிநேரம் இடி - மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி நகரில் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் தற்போது வெயில் என்பது அதிகரித்துள்ளது. இன்னும் கோடை காலம் தொடங்காத நிலையில் தினமும் வெயில் மண்டையை பதம் பார்க்கிறது. வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் என்பது பல இடங்களில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் தான் அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடியில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது.

தூத்துக்குடியில் சில நாட்களாக வெயில் அதிகரித்து இருந்தது. இப்படியான சூழலில் இன்று அதிகாலையில் தூத்துக்குடியில் பல இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியது. அதிகாலை 2 மணிக்கு இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடாமல் அதிகாலை 5.30 மணி வரை மூன்றரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.

மொத்தம் 7 செமீ மழை பதிவாகி உள்ளது. எதிர்பாராத இந்த மழையால் தூத்துக்குடி பிரையண்ட் நகர், முத்தம்மாள் புரம், சண்முகபுரம், திரேஸ்புரம் உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. அதேபோல் தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ரமலான் நோன்பு திறக்க பள்ளிவாசல் சென்ற இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ












Click it and Unblock the Notifications