Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்தினால் அபராதம் விதிக்க முதல்வர் தடை! ஆனால்..! உதயநிதி தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மேம்பாலங்களில் கார்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதாக துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கார் பார்க்கிங் விவகாரத்தில் போலீஸாருக்கு மக்கல் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் மிக அதிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வேளச்சேரி பகுதிவாசிகள் தங்கள் கார்களை மேம்பாலங்களில் நிறுத்தத் தொடங்கிவிட்டனர்.

chennai rain north east monsoon


போக்குவரத்து பாதிக்கும் என்பதால் கார்களை அப்புறப்படுத்துமாறு போக்குவரத்து போலீஸார் அறிவுறுத்தியும் யாரும் கேட்ட பாடில்லை. இதையடுத்து போலீஸார் அபராதம் விதிக்கப் போவதாக தெரிவித்தனர். அப்போது கார் உரிமையாளர்களோ, கார்களை எங்கள் பகுதியில் நிறுத்தினால் மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கில் செலவு வைக்கும்.

அதற்கு பதிலாக போலீஸார் விதிக்கும் ரூ ஆயிரமோ 5 ஆயிரமோ செலுத்திவிடலாம் என்கிறார்கள். சில இடங்களில் கார்களை விடும்போது போலீஸாருக்கும் உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் துணை முதல்வர் உதயநிதி பேசினார்.

அவர் கூறுகையில் அமைச்சர்களுடன் சேர்ந்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறேன். மீட்பு, நிவாரண பணிகளை மக்கள் பிரதிநிதிகள் மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையில் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளோம். சென்னை மாநகராட்சி பகுதிகளில் 14 மரங்கள் விழுந்துள்ளன.

இந்த 14 மரங்களும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அதிகமான பொதுமக்கள் வந்தாலும் அவர்களுக்கான ஏற்பாடு தயார் நிலையில் உள்ளது. 90 சமையல் அறைகள் தயார் நிலையில் உள்ளன.

இதுவரை சுமார் 45,000 எண்ணிக்கையில் காலை, மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. இரவு உணவுக்காக இரண்டு லட்சம் உணவு பாக்கெட் தயார் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 21 சுரங்க பாதைகளில் ஆறு சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் 4 சுரங்க பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்த சுரங்கப் பாதைகளில் மோட்டார் மூலமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 35 இடங்களில் முற்றிலுமாக தண்ணீர் அகற்றப்பட்டுள்ளது. காவல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள காரணத்தினால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழை நின்ற பின்னர் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும். கார்களை மேம்பாலத்தில் நிறுத்தினால் அபராதம் விதிக்கக் கூடாது என முதல்வர் ஆணையிட்டுள்ளார். கார்கள் பார்க்கிங் விவகாரத்தில் போலீஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

கார்களை மேம்பாலத்தில் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நாராயணபுரம் உள்ளிட்ட ஏரிகளின் கரைகள் உயர்த்தப்பட்டுள்ளன என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கையைத்தான் பொதுமக்கள் ஏற்கெனவே வலியுறுத்தினர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் அறிவிப்பால் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

அது போல் தமிழக அரசின் மழை மீட்பு நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக தமிவக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+