கடைசியா போன்ல 6 மணிக்கு பேசினேன்! திடீர்னு கன்டெய்னர்னு அலறல் கேட்டுச்சி.. ஜெயசீலன் மனைவி கண்ணீர்
சென்னை: நான் மழையில வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னேன். ஆனால் அவரை வர சொல்லியிருக்காங்கன்னு சொல்லி போனாரு என வேளச்சேரி ஜெயசீலனின் கர்ப்பிணி மனைவி மஞ்சு கண்ணீர் மல்க தெரிவித்தார்.
கடந்த திங்கள்கிழமை முதல் சென்னையில் மிக்ஜாம் புயலால் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது வேளச்சேரியில் உள்ள 5 பர்லாங் சாலையில் எரிவாயு நிலையத்தின் அருகே க்ரீன்டெக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கட்டுமானத்திற்காக 40 அடி பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

அதிக மழை பெய்ததால் அந்த பள்ளம் நிரம்பியது. இதையடுத்து அதற்கு அருகே கன்டெய்னர் அறைகளில் தங்கியிருந்த தொழிலாளர்களின் அறைகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு அந்த 40 அடி பள்ளத்தில் விழுந்தது.
இதில் 4 ஊழியர்கள் சிக்கியதாக கூறப்பட்டது. இரு தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் இருவரின் குடும்பத்தினர் தகவலறிந்த நிலையில் பெட்ரோல் பங்க் அருகே குவிந்தனர். மழை, புயலால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து 3ஆவது நாளாக மீட்பு பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் பச்சை நிற ஸ்கிரீன் போடப்பட்டு அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு மீட்பு பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. 64 அடிக்கு பள்ளம் தோண்ட திட்டமிடப்பட்டது. ஆனால் 50 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பகுதி தாழ்வான பகுதி என்பதால் குடியிருப்புக்காக அமைக்கப்பட்ட கன்டெய்னர் மழைநீரோடு அடித்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்தது.
2 மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மீட்பு பணிகள் சரியாக செய்யப்படவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பெரியாளுங்க பிள்ளைகள் என்றால் ஏரோபிளானை விட்டாவது எடுத்திருப்பாங்க, என் புள்ளைய மட்டும் ஏன் எடுக்க மாட்டேங்கிறாங்க என அழுதபடியே ஜெயசீலனின் தாய் கேட்டார்.
அந்த பள்ளத்தில் ஜெயசீலனும் நரேஷ் என்பவரும் சிக்கியதாக கூறுகிறார்கள். வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன். 25 வயதாகிறது. இவருக்கும் மஞ்சு என்பவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள்தான் ஆகிறது. மஞ்சு தற்போது கர்ப்பமாக உள்ளார். தனது கணவரின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவர் எப்போது வருவார் என கண்ணீருடன் காத்திருக்கிறார்.
இதுகுறித்து மஞ்சு கூறுகையில் திங்கள்கிழமை காலை 5.30 மணிக்கு என் கணவரை தேடி ஒரு வடமாநிலத் தொழிலாளர் வந்து பள்ளத்தில் தேங்கிய நீரை உடனே எடுக்க வேண்டும் என்பதால் அவரை அழைத்து வரச் சொன்னதாக சொன்னார். மழை அதிகமாக பெய்துக் கொண்டிருந்ததால் நான் போக வேண்டாம் என எச்சரித்தேன்.
சைட்டில் நிறைய தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை பார்த்துவிட்டு வருவதாக சொன்னார். இதையடுத்து 6 மணிக்கு எனக்கு போன் செய்தார். தான் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டேன் என்றார். கன்டெய்னர் உள்ளேதான் இருக்கிறேன் என தெரிவித்தார். கன்டெய்னர் கன்டெய்னர் என கத்தினார். உடனே போன் கட் ஆகிவிட்டது. நான் திரும்பவும் போட்டேன், போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது.
அப்போதுதான் பெட்ரோல் பங்க் அருகே பள்ளத்தில் கன்டெய்னர் விழுந்துவிட்டதாக அக்கம்பக்கத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் என் கணவர் அங்குதான் வேலை பார்த்துக் கொண்டிருந்தாரே என அலறி அடித்துக் கொண்டு போனேன். இதுவரை என் கணவரை மீட்கவில்லை, அவர் எப்படி இருக்கிறார் என தெரியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
பள்ளத்தில் சிக்கிய நரேஷ் அவருடைய குடும்பத்தை காப்பாற்றி வருகிறாராம். அவரது தாய் மஞ்சுளா, தந்தை சங்கர் ஆகியோர் சம்பவ இடத்தில் உள்ளனர். அந்த கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகே கேஸ் நிரப்பும் பணியை செய்து வந்தாராம். 3 நாட்களாக வீட்டிற்கு வரவில்லையாம், திங்கள்கிழமை புயல் எச்சரிக்கை விடுத்துள்ளதால் திரும்பி வருவதாக தெரிவித்தாராம். ஆனால் அவரது நிலை என்ன ஆனது என தெரியவில்லை.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications