தமிழகத்தை வெப்ப அலை தாக்கும்.. இந்த மாவட்ட மக்கள் உஷாரா இருங்க! வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வட தமிழக மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெயில்: வழக்கமாக மார்ச் மாதம் கோடைக்காலம் தொடங்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே கோடை தொடங்கிவிட்டது. எனவே தமிழகம் முழுவதும் வெளியில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. ஆனால், தென் மாவட்டங்களில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே தென் மாவட்ட மக்கள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர். ஆனால் வட மாவட்டங்களில் வெயில் வழக்கத்தைவிட அதிகமாக பதிவாகியிருந்தது.

வெப்ப அலை: ஈரோடு, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் 105 முதல் 107 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியிருந்தது. இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி 21ம் தேதி வரை, அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும். அதற்கு அடுத்த இரண்டு தினங்களில் சற்றே குறையக்கூடும்.
இன்று: அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2* - 3* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37-40° செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34'-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஏப்.18, 19ம் தேதிகளில்: அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 3-5. செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°- 41' செல்சியஸ் இருக்கக்கூடும். 20 மற்றும் 21ம் தேதியில் அதிகபட்ச வெப்பநிலை குறையக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் 2° செல்சியஸ் படிப்படியாக குறையக்கூடும்.
வெப்ப அலை முன்னெச்சரிக்கை: இன்று தொடங்கி 19ம் தேதி வரை, காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். நாளையும், நாளை மறுதினமும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மழை: மழையை பொறுத்த அளவில், ஏப்.18ம் தேதி தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 19ம் தேதி, தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே!












Click it and Unblock the Notifications