Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்கும் வெள்ளம்.. 3 நாட்கள் ரயிலில் தவித்தோம்.. ஸ்ரீவைகுண்டம் அனுபவங்களை திகிலோடு பகிர்ந்த பயணிகள்

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: காணும் இடமெங்கும் வெள்ளமாக காட்சி அளிக்க எந்த வித உதவியும் இன்றி 3 நாட்கள் ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கி தவித்துள்ளனர் பயணிகள். இன்றுதான் எங்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. சொந்த ஊருக்கு போய்விடுவோம் என்று உற்சாகத்தோடு கூறியுள்ளனர்.

திருச்செந்தூர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பேருந்து, ரயில் மூலம் திருச்செந்தூருக்கு வருகின்றனர். இந்த முறை ரயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவமாக போய் விட்டது.

We were stuck in the train for 3 days at Sri Vaikundam We will go to our hometown says Train Passanger

காரணம் பேயாமல் பெய்த பெருமழை அனைவருக்கும் திகில் அனுபவத்தை கற்று கொடுத்து விட்டது. சனிக்கிழமையன்று மாலை நேரத்தில் லேசாக தொடங்கிய மழை நேரம் செல்லச்செல்ல கூடுதலாக பெய்யத் தொடங்கியது. ஞாயிறுக்கிழமையன்று விடாமல் மழை கொட்டித்தீர்த்தது. சாதாரண மழையாகத்தான் இருக்கும் என்று அனைவருமே நினைத்தனர் ஆனால் அது பேரிடராக அமைந்து விட்டது.

சனிக்கிழமையன்று சென்னையில் இருந்து ஏராளமானோர் திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில் சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினர். விடிந்தால் சென்னை சென்று விடலாம் என்ற நம்பிக்கையோடுதான் ரயில் பெட்டிகளில் பயணிகள் ஏறி அமர்ந்தனர்.

கை குழந்தைகள், வயதானவர்கள், சிறுவர்கள், பெண்கள் என 800க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்செந்தூரில் இருந்து கிளம்பிய ரயில் அரை மணி நேரத்தில் அருகில் இருந்த ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

சில மணி நேரங்களில் ரயில் கிளம்பிவிடும் என்றுதான் பயணிகள் நினைத்தனர். ஆனால் ரயில் கிளம்புவதாக தெரியவில்லை. விடிய விடிய மழை கொட்டியது. ரயில் தண்டவாளத்தின் அருகில் இருந்த மண் மொத்தமும் அடித்துக்கொண்டு போய் விட்டது. அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ரயில் தண்டவாளம். திருச்செந்தூரை விட்டு கிளம்புவதற்கு முன்பாக தகவல் தெரிந்திருந்தால் பயணிகள் பாதுகாப்பாக ஏதாவது ஹோட்டல், கோவிலை சுற்றியுள்ள மடங்களில் பாதுகாப்பாக தங்கியிருப்பார்கள்.

ரயில் கிளம்பி ஸ்ரீவைகுண்டம் ஸ்டேசன் வந்த பிறகுதான் தகவல் கூறப்பட்டதால் அங்கேயே நிறுத்தப்பட்டது. இரவு தூங்கி எழுந்த பயணிகள் காலையில் பார்த்த போது சுற்றிலும் வெள்ளக்காடாக இருந்தது. என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. வெள்ளம் எப்போது வடியும் சொந்த ஊருக்கு எப்படி போகப்போகிறோம் என்ற கேள்விதான் எல்லோர் முன்பாகவும் இருந்தது.

ரயிலில் இருந்த குழந்தைகள் பாலுக்காக தவித்து போயினர். வயதானவர்கள், குழந்தைகள் என பலருக்குமே பசி எடுக்க ஆரம்பித்து விட்டது. எங்கும் உதவி கிடைக்கவில்லை. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. படகு மூலம் கூட மீட்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. அருகில் இருந்த கிராமத்தினர்தான் ஒன்றாக சேர்ந்து சமைத்து எடுத்துக்கொண்டு வந்து பயணிகளுக்கு கொடுத்தனர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்றுதான் பயணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தங்களுக்கு நேர்ந்த திகிலான அனுபவம் குறித்து பேசிய பெண்கள், கிராமத்தில் இருந்தவர்கள்தான் பால், உணவு, பணியாரம் என அவர்களால் என்னென்ன செய்து தர முடியுமோ அதை எல்லாம் எங்களுக்கு செய்து கொண்டு வந்து கொடுத்தனர். அவர்கள் இல்லாவிட்டால் எங்களால் எதுவும் செய்திருக்க முடியாது என்று கூறினர்.

இரவு நேரத்தில் சுற்றிலும் வெள்ள நீர் ஓடிக்கொண்டிருக்கும் போது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தோம். குழந்தைகளுக்கு பயமாகவும் இருந்தது. யாருடைய முகத்திலும் சிரிப்பு இல்லை என்று ரயிலில் தவித்த பயணிகள் கூறினர். இன்றுதான் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் சென்னைக்கு போய்விடுவோம் என்ற நம்பிக்கை வந்து விட்டதாக கூறினார் அந்த பெண் பயணி.

திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட அரை மணி நேரத்திற்குள் இப்படி ஆகி விட்டது. குழந்தைகள் எல்லாம் ரொம்ப சிரமப்பட்டனர். கோவிலில் சமைத்து சாப்பாடு போட்டனர். கிராம மக்கள் ரொம்ப உதவி செய்தனர். வயதானவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டார்கள். குழந்தைகள், சின்ன பசங்க எல்லாம் ரொம்ப சிரமப்பட்டனர். கிராமத்திற்கு அரசு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் ரயில் பயணிகள்.

திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மட்டும் கடந்த 2 நாட்களில் 90 செமீ மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவே 40 செமீ மழை பதிவாகியிருந்தது. எதிர்பாராத மழையும் வெள்ளமும் ரயில் பயணிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது.

தற்போது ஸ்ரீவைகுண்டம் ரயிலில் இருந்து பயணிகள் படிப்படியாக மீட்கப்பட்டு வாஞ்சிமணியாச்சிக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். அவர்கள் பேருந்து அல்லது ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+