மஞ்ச மஞ்சளா அதென்ன.. வானத்தில் திடீர்னு தோன்றிய "அதிசயம்".. நம்ம சென்னையிலதான் பார்த்தீங்களா? வாவ்
சென்னை: சென்னையில் எதிர்பார்த்தபடியே நேற்றைய தினம் மழை கொட்டிய நிலையில், அது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை கிளப்பி விட்டு வருகின்றன.
தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களுக்கு மழை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அந்தவகையில், சென்னையிலும் மழை பெய்யும் என்று தொடர்ந்து வானிலை மையம் தெரிவித்து வருகிறது.
நேற்றைய தினமும்கூட, சென்னையில் மழை பெய்யும் என்று தெரிவித்திருந்த நிலையில், அதன்படியே, நகரின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை வெளுத்துக்கட்டியது..

திடீர் மழை: நேற்று மாலை, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்தது.. மேற்கு திசை வேறுபாடு காரணமாக சென்னையில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.. அதுபோலவே, வடபழனி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.. இரவு நேரங்களில் புதிய புதிய காற்று உருவாவதுதான் மழைக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், சென்னையில் நேற்று வானம் திடீரென கலர் மாறி காட்சி தந்தது.
இருண்ட வானம்: மாலை 6.30 மணிக்கு வானம், சிகப்பு மஞ்சளும் சேர்ந்து ஆரஞ்சு கலரில் காட்சி தந்தது.. வழக்கமாக மழை பெய்தால் வானம் இருண்டு காணப்படும்.. மழை விட்டபிறகுதான், வெளிறிப்போய், வெளிச்சமாக இருக்கும்..
ஆனால், நேற்று சாயங்காலம், வானம் முழுக்க மேகமூட்டத்துடன் மழை பெய்து கொண்டிருந்தபோதே, இப்படியொரு வித்தியாசமான வெளிச்சம் வானத்தில் தெரிந்தது. திடீரென மஞ்சள் கலரும், பிறகு ஆரஞ்சு கலருமாக சேர்ந்து காட்சி தந்தது. மழையும் + மஞ்சளும் சேர்ந்து பார்க்கவும், சென்னைவாசிகள் திணறிப்போய்விட்டனர்.
சுழன்று வீசும்: இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, ஈராக் நாட்டிலும் ஆரஞ்ச் நிறத்தில் வானம் காணப்பட்டது.. இதை பார்த்து அம்மக்கள் பயந்துவிட்டனர்.. பொதுவாக, புழுதிப் புயல் வீசும்போது, எதிரே வருபவர்கள்கூட கண்ணுக்கு தெரியாது.. அந்த அளவுக்கு சுழன்று சுழன்று புழுதி புயல் வீசும்..
இந்த புழுதிப் புயல் காரணமாக ஈராக் நாட்டில் வானம் ஆரஞ்சு நிறத்தில் அப்போது காணப்பட்டது.. உடனடியாக ஈராக் நாட்டிற்கு வரும் சர்வதேச விமானங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டன..
ஆச்சரியம்: ஆனால், நேற்று சென்னையில் அப்படி எந்த புழுதியும் வீசப்படவில்லை.. சாதாரணமாக மழை பெய்தாலும், வானம் என்னவோ வெளிச்சமாய், மஞ்சளாய் மின்னியது ஆச்சரியத்தை தந்திருந்தது. இந்த போட்டோக்கள்தான் இணையத்திலும் வெளியாகி வியப்பை கூட்டி வருகின்றன.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications