சென்னைக்கு சம்பவம் இருக்கு.. வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட்! தேதி குறிச்சாச்சு
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் சென்னையில் போதுமான அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில் சென்னையில் மழைக்கான வாய்ப்பு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "கடலூர் தொடங்கி டெல்டா மற்றும் தென் தமிழகம் வரை பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டி தீர்த்திருக்கிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான மாஞ்சோலையில், 20 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது. கடந்த 4 நாட்களில் 3வது முறையாக இந்த அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இப்படியாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமெடுக்க தொடங்கியிருக்கிறது.

டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள்
இன்று காலை தொடங்கி அடுத்த 24 மணி நேரத்தில், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். கடலூர் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைய வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை தொடரும். புயல் அமைப்பை பொறுத்தவரை, இலங்கை கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மெல்ல வலுப்பெற்று வருகிறது. இது நமக்கு சாதகமான நிலையாக மாறியிருக்கிறது. நவ.26ம் தேதி வரை காத்திருப்போம். இது குறித்த இன்னும் கூடுதலான தகவல்கள் தெரிய வரும்.
சென்னைக்கு மழை
சென்னையை பொறுத்தவரை, போதுமான மழைப்பொழிவு இல்லை. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு தேவையான மழை தற்போது பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைக்கான பற்றாக்குறை நிலவுகிறது. மழைப்பொழிவை தீவிரப்படுத்தும் MJO எனப்படும் உலகளாவிய வானிலை அமைப்பு டிசம்பர் மாதத்தில் இந்திய பெருங்கடலுக்கு திரும்ப வரவில்லை. எனவே மழைக்கான வாய்ப்பு குறைவு.
இந்த சூழலில், தற்போது வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கான மழை தேவையை பூர்த்தி செய்யும். அதற்கு பின்னர் இந்த பகுதியில் மழைக்கு வாய்ப்பு இருக்காது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை 2 சதவீதம் குறைவாக பெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 23ஆம் தேதி வரை சராசரியாக 309.9 மில்லி மீட்டர் அளவுக்கு தமிழகத்தில் மழை பதிவாகி இருக்கிறது. இந்த காலத்தில் 317.4 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருக்க வேண்டும். அந்த வகையில் மழை இயல்பை விட குறைவாக பெய்திருக்கிறது.
எந்த மாவட்டங்களில் மழை அதிகம்?
குறிப்பாக சென்னையில் 24 சதவீதமும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 42 சதவீதமும், காஞ்சிபுரத்தில் 11 சதவீதமும் மழை இயல்பை விட குறைவாக பெய்திருக்கிறது. செங்கல்பட்டுதான் தமிழகத்திலேயே மழை மிக குறைவாக செய்துள்ள மாவட்டமாகும். அதிகபட்ச மழை பொழிவை பொறுத்தவரையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 117 சதவீதம் மழை கூடுதலாக பெய்திருக்கிறது. வேலூரில் 50 சதவீதம், தென்காசியில் 52 சதவீதம், ராணிப்பேட்டையில் 58 சதவீதம் அளவுக்கு மழை கூடுதலாக பதிவாகி இருக்கிறது.
அதேபோல கடந்த அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி, நேற்று வரை பெய்த மழை அளவுகளில் 2வது நாளாக நேற்று அதிகபட்சமாக மழை பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்னர் நவம்பர் 18ஆம் தேதி அதிகபட்சமாக மழை பதிவாகி இருந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications