ஒரே நாளில் வெறும் 20 மி.மீ. மழை! சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நிலவரம்! வெதர்மேனின் டேட்டா

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னைக்கு குடிநீர் கொடுக்கும் ஏரிகளின் தற்போதைய நீர் மட்டம் எவ்வளவு என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 13.222 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 6 ஏரிகளின் நீர் மட்டம் தற்போது 4.486 டிஎம்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையின் குடிநீர் ஏரிகளின் இன்றைய நீர் இருப்பு நிலவரங்களை பார்க்கலாம். நேற்று பெய்த 20 மி.மீ. மழைக்கே செம்பரம்பாக்கம் ஏரிக்கு 300 கனஅடியும், ரெட்டேரிக்கு 150 கனஅடியும் நீர்வரத்து கிடைத்துள்ளது. இது வடகிழக்கு பருவமழையின் முதல் நாள் கிடைத்த மழை. நீர்வரத்து நிலவரத்தை நாளை பார்க்கலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர், 6 ஏரிகளின் நீர் இருப்பு குறித்த தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

north east monsoon weather rain

ரெட்டேரி

ரெட்டேரியின் மொத்தம் ஆழம் 21.20 அடியாகும். அதில் தற்போது 14 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டிஎம்சியாகும். தற்போது 1,876 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 250 கனஅடி நீர் வரத்து வருகிறது. 199 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று பெய்த மழையின் அளவு 20 மி.மீ. ஆகும்.

சோழவரம்

சோழவரம் ஏரியின் மொத்தம் ஆழம் 18.86 அடியாகும். அதில் தற்போது 2.56 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1.081 டிஎம்சியாகும். தற்போது 0.120 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. நீர் வரத்து ஏதும் இல்லை. ஆனால் 8 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று பெய்த மழையின் அளவு 1 மி.மீ. ஆகும்.

செம்பரம்பாக்கம்

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தம் ஆழம் 24 அடியாகும். அதில் தற்போது 13.80 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டிஎம்சியாகும். தற்போது 1,319 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 600 கனஅடி நீர் வரத்து வருகிறது. 191 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று பெய்த மழையின் அளவு 21 மி.மீ. ஆகும்.

பூண்டி

பூண்டி ஏரியின் மொத்தம் ஆழம் 35 அடியாகும். அதில் தற்போது 21.61 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டிஎம்சியாகும். தற்போது 0.412 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. நீர் வரத்து இல்லை. 530 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

north east monsoon weather rain

வீராணம்

வீராணம் ஏரியின் மொத்தம் ஆழம் 15.60 அடியாகும். அதில் தற்போது 11.22 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1.465 டிஎம்சியாகும். தற்போது 0.527 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. 240 கனஅடி நீர் வரத்து வருகிறது. 170 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று பெய்த மழையின் அளவு 3 மி.மீ. ஆகும்.

கண்ணன்கோட்டை

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்தம் ஆழம் 36.61 அடியாகும். அதில் தற்போது 27.81 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 0.500 டிஎம்சியாகும். தற்போது 0.232 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. நீர் வரத்து இல்லை. 20 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ஆக, மொத்தம் இந்த 6 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டிஎம்சி. அதில் 4.486 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருக்கிறது. அதாவது மொத்த கொள்ளளவில் 33.9 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+