சென்னைக்கு வந்து ஸ்டாலினை சந்தித்து நன்றி சொன்ன மாணவர் பாரதிதாசன்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது ஆண்டிப்பட்டியில் இருந்து சர்வதேச பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குறித்து கேட்டு அறிந்து கொண்டதாக ஸ்டாலின் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

திமுக ஆட்சியின் போது அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தலித் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்கும் செலவுகளை தமிழக அரசே ஏற்கும். அந்த வகையில் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருபவர் மாணவர் பாரதிதாசன். இவர் தமிழக அரசு சார்பாக தனக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவி வரவில்லை என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.

Stalin

இந்த வீடியோ டிரெண்டான நிலையில் அமைச்சர் வன்னி அரசு தரப்பில் அவரிடம் சில ரசீதுகளும், பல்கலைக்கழக கடிதமும் கேட்டிருப்பதாக விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து மாணவர் பாரதிதாசன் ஒரு மாதத்திற்கு முன்பாகவே அந்த ரசீதுகள் மற்றும் கடிதத்தை அனுப்பிவிட்டதாக கூறி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் அமைச்சர் வன்னி அரசு மற்றும் மாணவர் பாரதிதாசன் இடையில் ஈகோ யுத்தம் வந்தது. திடீரென திமுக தலைவர் ஸ்டாலின், மாணவர் பாரதிதாசனுக்கு தமிழக அரசு சார்பாக உதவி செய்ய முடியாது என்றால், நேரடியாக சொல்லிவிடுங்கள்.. அதனை தமிழக மக்களும், திமுகவும் பார்த்து கொள்ளும் என்று அறிவித்தார். இதன்பின் அடுத்த 2 நாட்களில் பாரதிதாசனுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுவிட்டது.

இந்த விவகாரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய விவாதமாக மாறியது. இந்த நிலையில் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை மாணவர் பாரதிதாசன் நேரில் சந்தித்து நன்றி கூறியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள ஸ்டாலின், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் இன்று என்னைச் சந்தித்தார்.

திராவிட மாடல் அரசும், கழகமும் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார். இவரைப் போல இன்னும் பல முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருவதைக் கேட்டுப் பெருமை கொண்டேன். ஆண்டிப்பட்டியில் இருந்து உலகப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குறித்து ஆர்வம் மேலிடக் கேட்டேன்.

பாரதிதாசன் போன்ற நம் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வழங்கி ஊக்குவித்திட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்துள்ளார். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின், நம் திராவிட மாடல் ஆட்சியின் போது அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் தம்பி பாரதிதாசன் அவர்கள் இன்று நம்மைச் சந்தித்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த தம்பி பாரதிதாசன், சர்வதேச அளவிலான கல்வி நிலையத்தில் தான் செய்துவரும் ஆராய்ச்சி குறித்து மகிழ்ச்சியோடு விளக்கினார். சமீபத்தில் டெல்லி எய்ம்ஸ்-ல் நடைபெற்ற ஆய்வு மாநாட்டில் பங்கேற்று தன் ஆய்வுப்பற்றி உரையாற்றி திரும்பி இருக்கிறார். பாரதிதாசனின் அடுத்தடுத்த கல்விப்பணியும் - ஆய்வுப்பணியும் சிறக்க வாழ்த்தினோம்.

அவர் போன்ற நம் மாணவர்களின் லட்சியப்பயணம் தொடர இந்த அரசு அனைத்து வகையிலும் துணை நிற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். ஸ்டாலினை பாரதிதாசன் சந்தித்து உரையாடிய வீடியோ திமுகவினர் மத்தியில் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+