டெல்லி சென்ட்ரல் பார்க்கை மூடினாலும்.. போராட்டம் நடப்பது நிச்சயம்! சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் தேசிய கொடியை ஏந்தியதற்காக எங்களை கைது செய்வார்கள் என்றால், நாங்கள் சிறைக்கு செல்லவும் தயாராக இருப்பதாக கரப்பான்பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். இன்று இரவோ அல்லது நாளை காலையோ போலீசார் என்னை கைது செய்வார்கள் என்று கூறிய அபிஜீத் தீப்கே, இந்தப் போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முறைகேடு செய்ததாக கூறி கரப்பான்பூச்சி கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்புகள் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சிஜேபி கட்சிக்கு ஆதரவாக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் குவிந்துள்ளனர். ஏற்கனவே அக்டோபர் 10ஆம் தேதி ஜந்தர் மந்தரில் சிஜேபி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

Abhijeet Dipke

ஆனால் அன்றைய தினம் டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, ஜந்தர் மந்தர் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டை எடுத்தனர். இதன்பின் போராட்டம் நடத்தக் கூடிய இடங்களுகான பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சிஜேபி நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா மற்றும் செளரவ் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தேசிய கொடியுடன் போராடிய சிஜேபி கட்சியினர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்த உள்ளதாக சிஜேபி நிறுஇவனர் அபிஜீத் தீப்கே அறிவித்தார். இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க நீதிமன்றமும் மறுத்துள்ள நிலையில், போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அபிஜீத் தீப்கே திடீரென நள்ளிரவில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அதில் அபிஜீத் தீப்கே பேசுகையில், இன்று இரவோ அல்லது நாளை காலையோ என்னை போலீசார் கைது செய்யக்கூடும். தேசியக் கொடியை ஏந்தியதற்காக சிறைக்கு செல்ல வேண்டுமென்றால், அதனை நேரடியாக சந்திக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.

அக்டோபர் 10ஆம் தேதி போராட்டத்தை அறிவித்திருந்த போது, ஒட்டுமொத்த டெல்லியையும் முடக்கி மெட்ரோ, பேருந்து சேவைகள் நிறுத்தி இணையதள சேவையை கூட முடக்கி தடையை ஏற்படுத்தினார்கள். ஆனால் இன்று சென்ட்ரல் பார்க் பகுதியில் தேசியக் கொடியுடன் போராடுவோம் என்று அறிவித்த பின், உடனடியாக அந்த பூங்காவையே மூடிவிட்டார்கள்.

நாளை என்ன நடந்தாலும், சென்ட்ரல் பார்க்கில் தேசியக் கொடியுடன் பேரணி நடக்கும். நாங்கள் அமைதியான முறையில் தேசியக் கொடியுடன் பேரணி செல்வோம். இந்தப் பேரணியில் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நள்ளிரவில் அபிஜீத் தீப்கே அளித்துள்ள இந்த பேட்டி தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாளை டெல்லியில் சிஜேபி போராட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலமாக சென்ட்ரல் பார்க் மூடப்பட்டாலும் போராட்டம் நடக்கும் என்று அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+