பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்தாமல்.. எப்படி ஒருவர் தலைவராக முடியும்? விஜய் மீது அண்ணாமலை அட்டாக்
கோவை: பத்திரிகையாளர்களை சந்திப்பை கூட நடத்தாமல் எப்படி ஒருவர் தலைவராக இருக்க முடியும் என்று முதல்வர் விஜய்யை வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை மறைமுகமாக விமர்சித்துள்ளார். தினமும் மக்களை சந்தித்தால் அவரின் இமேஜ் குறைந்துவிடும் என்றும், வாரத்தில் இருமுறை மக்கள் சந்தித்து பேசினால் தான் அவர் தலைவர் என்றும் அண்ணாமலை சாடியுள்ளார்.
கோவையில் வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பாக அப்துல் கலாம் அறம் மற்றும் அரசியல் பயிற்சி மைய தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் அண்ணாமலை பேசுகையில், இங்குள்ள யாருக்கும் எந்தவித அரசியல் பின்புலமும் கிடையாது. எளிய பின்னணியில் இர்ந்து முடியாது என்ற வார்த்தையை ஏற்க மறுத்ததால் இங்கு வந்துள்ளோம். வீ தி லீடர்ஸ் அமைப்பு தொடங்கி 21 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன.

தன்னார்வலர்கள் கன்னியாகுமரி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் களப்பணி மேற்கொண்டு வருகிறார்கள். இன்று கண்ணாடிக்குள் இருந்து காரில் கை காட்டினால் தான் தலைவன். அடிக்கடி மக்களை பார்க்காமல், அவ்வப்போது பார்ப்பது மற்றும் தினமும் மக்களை பார்த்தால் அவரின் இமேஜ் குறைந்திவிடும். பேசுவதை கூட வாரத்திற்கு ஒருமுறையோ, மாதத்திற்கு 2 முறையோ பேசினால் தான் தலைவர்.
பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தாமல் எப்படி ஒருவர் தலைவராக இருக்க முடியும்? நான் யாரையும் குறை, குற்றம் சொல்ல விரும்பவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் நான் போட்டியிடுகிறோம். தமிழ்நாட்டில் 12,525 ஊராட்சிகளில் வீ தி லீடர்ஸ் சார்பில் களம் இறங்குவார்கள். உள்ளாட்சியில் மாற்றம் வர வேண்டும். நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி என்று அத்தனை நிலைகளிலும் போட்டியிடுவோம்.
யாரை பார்த்தும் நமக்கு பயமில்லை. யாருக்கும் போட்டியாக நாம் இல்லை. மாற்றத்திற்காக வந்துள்ளோம். பயிற்சி வகுப்பில் அடிப்படை தலைமைப் பண்பு மற்றும் கூடுதல் தலைமைப் பண்பு தொடர்பாக பயிற்சி தருகிறோம் என்று கூறினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், காற்றாலை மின் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் தமிழ்நாடு ஏன் ரூ.35 கொடுத்து மின்சாரம் வாங்கவேண்டும்?
அதேபோல் நூலகத்தை திறக்க கோவைக்கு வரும் முதல்வர் விஜய், மக்களை இடையூறு செய்ய வேண்டாம். இரு பக்கமும் தடுப்புகள் போட்டு வைத்துள்ளனர். யாரையும் தொந்தரவு செய்யாமல் முதல்வருக்கு தேவையான பாதுகாப்பு கொடுத்தால் போதுமானது. மேலும், டெல்லியில் இளைஞர்கள் கேள்வி கேட்பதில் எந்த தவறும் இல்லை. இளைஞர்களின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
