சென்னை அருகே.. புயல் கரையை கடக்கும் நேரத்தில்.. நடக்க போகும் 3 பெரிய சம்பவங்கள்.. நோட் பண்ணிக்கோங்க!
சென்னை: வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் கரையை கடக்கும் நேரத்தில் 3 சுவாரசியமான சம்பவங்கள் நடக்க உள்ளன. அந்த சம்பவங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கு திசையில் 480 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 2 கிமீ வேகத்தில் நகரத் தொடங்கியது.

இன்று மாலை - நாளை அதிகாலைக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நவ.29, 30 ஆகிய 2 நாட்கள் ஒரு சில பகுதிகளில், கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. 12- 20 செ.மீ வரை மழை பெய்யலாம் என்பதால், அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மரக்காணத்தில் 2வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனையடுத்து, 19 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 3வது நாளாக மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. மேலும் அப்பகுதிகளில் தரைக்காற்று பலமாக வீசி வருகிறது.
என்ன நடக்கும்?: வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் கரையை கடக்கும் நேரத்தில் 3 சுவாரசியமான சம்பவங்கள் நடக்க உள்ளன. அந்த சம்பவங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம். நாளை புயல் உருவாகும்.. பெரும்பாலும் 30ம் தேதி அல்லது 1ம் தேதி புயல் கரையை கடக்கும்.
1. புயல் கரையை கடக்கும் முன் கடக்கும் பகுதிக்கு அருகே பலத்த காற்று வீசும். புயல் கரையை கடக்கும் முன் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
2. புயல் கரையை கடக்கும் முன் பலத்த கனமழை பெய்யும். முக்கியமாக எங்கே கரையை கடக்க போகிறதோ அதற்கு அருகில் உள்ள இடங்களில் கனமழை பெய்யும். பெரும்பாலும் 12- 20 செ.மீ வரை மழை பெய்யலாம் என்பதால், அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.
3. புயல் கரையை கடந்த பின் கடக்கும் பகுதிக்கு அருகே பலத்த காற்று வீசும். அதோடு புயல் கரையை கடந்த பின் மழை மேகங்களை கொண்டு வரும். இந்த மழை மேகங்கள் விடாமல் மழையை கொடுக்கும். இந்த மழை மேகங்கள் காரணமாகவே பெரும்பாலும் மிக அதிக கனமழை பதிவாகும்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடைந்து வருகிறது. வானிலை மைய கணிப்புபடி இன்று அது புயலாக மாறும். இதற்கு 'FENGAL - ஃபெங்கல்' என பெயர் சூட்டப்படும். இப்பெயரை சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது. இந்த புயல் கரையை கடப்பது தொடர்பான முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளன.
இந்த புயல் நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் உள்ளது, கடல் பரப்பில் மேல் வெப்பநிலை அதிகம் உள்ளது இதன் காரணமாக புயல் உருவாவதற்கான.. அது வலிமை அடைவதற்கான சாதகமான சூழல்கள் உள்ளன.
எங்கே உள்ளது?: சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 800 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.












Click it and Unblock the Notifications