எப்படி இருந்த துபாய்.. இப்படி ஆகிடுச்சே.. உலகத்தையே நடுங்க வைத்த ஒரு நாள் மழை.. நீங்களே பாருங்க
துபாய்: துபாய் அழகான நகரம்.. சர்வதேச நகரம்.. உலகின் எந்த மூலைக்கு செல்லவும் துபாயில் இருந்து விமானத்தில் ஏறி போகலாம்... இந்தியாவில் செல்லும் பலர், துபாய் வழியாக பல்வேறு நாடுகளுக்கு இன்றும் செல்ல முடியும்.. உலகின் விமான போக்குவரத்தின் முக்கியமான நகரத்தை ஒரு நாள் மழை என்னவெல்லாம் செய்திருக்கிறது தெரியுமா? பாருங்கள்..
மிகவும் வலுவான உள் கட்டமைப்பு, தரமான சாலைகள், உலகமே வியக்கும் வகையில் அழகான நகரம்.. எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் தாங்கும் மிகச்சிறந்த வடிகால் அமைப்பு, உலகின் பல்வேறு நாட்டு மக்கள் வந்து செல்லும் பாலைவன சொர்க்கம், உலக கோடீஸ்வரர்கள் பலர் வாழ ஏங்கும் நகரமாக துபாய் இன்று இருக்கிறது,.

துபாயில் இந்தியாவில் இருந்து சென்ற ஏராளமான மக்கள் வசிக்கிறார்கள்.. குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வசிக்கிறார்கள். மலையாளம் அல்லது தமிழ் மட்டுமே தெரிந்தவர்களாக இருந்தாலும், துபாயில் வாழ்வது எளிது.. வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உள்ள நகரமாகவும் இருக்கிறது. இவ்வளவு அற்புதமான துபாயின் வானுயுயர்ந்த கட்டிடங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், கார்கள், சாலைகளை, நீங்கள் எல்லாம் என் முன் ஒன்றுமே இல்லை என்பது போல் ஒரு நாள் மழை சம்பவம் செய்துவிட்டு போயிருக்கிறது,
சென்னை மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட இடைவிடாத மழை எந்த அளவிற்கு சென்னை மற்றும் புறநகரை புரட்டி போட்டதோ, அதுபோல் துபாய் நகரத்தை ஒரு நாள் மழை அதிர வைத்துள்ளது.. சென்னை போல் மிக மோசமான பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், சாலைகள் வெள்ளக்காடாக மாறியது.
துபாயின் முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.. சாலைகளில் வாகனங்கள் செல்லவே முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி கிடக்கின்றன.. அந்த மழை நீரில் பல கார்கள் மூழ்கி கிடக்கின்றன... துபாயின் அமீரகத்தில் நேற்று அபுதாபி, அல் அய்ன், துபாய், சார்ஜா, அஜ்மான், புஜேரா, ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளின் பல சாலைகளில் வெள்ளம் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதேநேரம் ஏற்கனவே மழை பெய்வது குறித்து எச்சரிக்கை காரணமாக அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றினார்கள். பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் செல்லாமல் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டார்கள்..
மழை குறித்துவெளியாகி உள்ள ஒரு வீடியோவில் சாலையில் தேங்கி நின்ற மழை நீரில் கார்கள் வரிசையாக நிற்கின்றன.. அந்த கார்களின் அமர்ந்தபடி மக்கள் என்ன செய்வது என்று கவலையுடன் நிற்கிறார்கள்.. மழை வெள்ளத்துக்கு நடுவில் கரப்பான் பூச்சி போல் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதாக வீடியோவில் உள்ளன.. துபாய் மேம்பாலத்திற்கு கீழ் தண்ணீர் எந்த அளவிற்கு இருக்கிறது என்ற அந்த காட்சியை பார்த்து உலக நாடுகளே கவலையில் ஆழ்ந்துள்ளன. ஒரு நாள் மழை துபாயில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது..












Click it and Unblock the Notifications