புயல் வருதே.. மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது? எந்தெந்த மாவட்டங்களில் கவனம் தேவை?
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டு இருக்கும் நிலையில் அடுத்த 2 நாட்கள் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்ற அறிவுறுத்தி இருக்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் (03.12.2023) & (04.12.2023) ஆகிய இரண்டு நாட்கள் பரவலாக அநேக இடங்களில் கனமழையும் (6 செ.மீ மேல்), ஒருசில இடங்களில் (12 செ.மீ மேல்), கடலோரத்தின் ஓரிரு இடங்களில் (20 செ.மீ) மேல் பதிவாக கூடும்.

வடகோடி மாவட்டங்களில் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் தரைக் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க கூடும், டிசம்பர் 4 ஆம் தேதி தரைக் காற்றின் வேகம் 60 கிமீ வரை செல்லும், கரையை கடக்கும் போது 65 கிமீ முதல் 70 கிமீ வரை செல்லலாம். வடக்கு உள் மாவட்டங்களான வேலூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மேற்கு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம் போன்ற மாவட்டங்களில் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் கனமழை எதிர்ப்பார்க்கலாம்.
தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் & கொங்கு மண்டலத்தில் பெரிதாக அடுத்த 4 நாட்கள் (நான்காம் சுற்றில்) மழை வாய்ப்பு குறைவு, வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் மாவட்ட மக்கள் கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்றுங்கள்:
1. டிசம்பர் 3, 4 ஆகிய இரண்டு தேதிகளில் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்.
2. வெளியில் செல்லும் பயணங்களை டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துவிடுங்கள். அலுவலகம் செல்பவர்கள் வீடுகளிலேயே வேலை செய்ய முயற்சியுங்கள் (Work from home).
3. மருத்துவமனை செல்ல இருப்பவர்கள் / மருந்து மாத்திரை வாங்க வேண்டிய முதியவர்கள் இன்றே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். 4. அடுத்த 2 நாட்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை இன்று (02.12.2023) இரவுக்குள் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
5. தமிழகத்தின் வட கடலோரம் & டெல்டா மாவட்ட விவசாயிகள் வேளாண்மை பணிகளை அடுத்த 3 நாட்களுக்கு ஒத்திவைப்பது நல்லது.
6. வடகோடி மாவட்ட நகர்புற பகுதிகளில் சாலையோர கடைகள் வைத்திருப்பவர்கள் பொருட்களை மழையில் பாதிக்காமல் பத்திரப்படுத்தி வைப்பது நல்லது.
7. தாழ்வான இடங்களில் இருப்பவர்கள், பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது நல்லது. பாதிப்பில்லாமல் நல்ல மழையை கொடுத்து செல்லும் என சலனமாக இச்சலனம் அமையும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications