கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத வகையில் 50 செ.மீ. மழை பெய்தது ஏன்? 3 சின்ன காரணம்.. 1 பெரிய காரணம்
சென்னை: கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத வகையில் 50 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்த மழைக்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23 இடங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் கெடாரில் 42 செ.மீ, தருமபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தலில் 32 செ.மீ, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் 23 செ.மீ. மழை பதிவு பெய்துள்ளது.

மோசமான நிலைமை: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாணி ஆற்றில் 20 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மாநில பேரிட மீட்புப் படையினர் அங்கே மக்களை மீட்டு முகாமிற்கு அழைத்து சென்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் கோரத்தாண்டவம் ஆடி உள்ளது. திடீர்குப்பம், குண்டுசாலை, செம்மண்டலம், வெளிச்செம்மண்டலம், சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
3 சின்ன காரணம்: கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத வகையில் 50 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்த மழைக்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
1. இந்த பெஞ்சல் புயல் வலிமை இழக்கவே நேரம் எடுத்தது. பொதுவாக ஒரு புயல் வலிமை இழக்க நேரம் எடுக்கிறது என்றால் அதில் தொடர்ந்து மேகங்கள் சேர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படி சேர்ந்து கொண்டே இருந்தால் அது அதிக மழையை கொடுக்க போகிறது என்று அர்த்தம்.
2. ஃபுல் எபெக்ட் என்று சொல்வார்கள். அதாவது ஒரு புயல் கரையை கடந்த பின்.. அதோடு கூடவே மேகங்களை கூட்டி வரும். இதனால் புயல் எந்த பாதையில் எல்லாம் செல்கிறதோ அந்த பாதையில் எல்லாம் மேகங்கள் மழையை கொடுக்கும்.
3. அதேபோல் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட சென்னை டூ பெங்களூர் ஸ்ட்ரெச் முழுக்க வானிலை இதற்கு சாதகமாக இருந்தது. எங்கேயும் மழை மேகங்களுக்கு எதிரான சூழல் இல்லை. வெப்பம் தொடங்கி, தரைக்காற்று வரை எல்லாமே நல்ல மழைக்கு சாதகமாக இருந்தது.
பெரிய காரணம்: இன்னொரு பெரிய காரணம்.. பெஞ்சல் வேகம். அது நகரவே இல்லை. 3 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் சில கிலோ மீட்டர்கள் நகர்ந்தது. அந்த வேகம் காரணமாக எங்கெல்லாம் நிற்கிறதோ அங்கெல்லாம் புயல் ஆட்டம் காட்டியது. அங்கெல்லாம் கடுமையான மழையை கொடுத்தது.
சென்னையில் கடந்த வருடம் இதே காரணத்தால்தான் வெள்ளம் வந்தது. அதே சம்பவம் இப்போது வட மாவட்டங்களில் நடந்துள்ளது. கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத வகையில் 50 செ.மீ. மழை பெய்யவும் அருகில் உள்ள மாவட்டங்களில் 30+ செமீ மழை பெய்யவும் இதுவே முக்கிய காரணம் ஆகும்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை.. சென்னைக்கும் அலர்ட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications