படகுல கூட வர முடியல.. பத்திரமா இருங்க.. நடுக்கமான குரலில் பேசிய மாரி செல்வராஜ்.. கூடவே நின்ற உதயநிதி
சென்னை: தூத்துக்குடி மற்றும் நெல்லையில் வெள்ளம் காரணமாக ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் குறித்து தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் நேரில் சென்று பார்வையிட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி அளித்துள்ளார்
தென் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்து உள்ளது. பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

மீட்பு பணிகள்: மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ₹9 லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு 49,000 போர்வைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
மாரி செல்வராஜ் பேட்டி: தூத்துக்குடி மற்றும் நெல்லையில் வெள்ளம் காரணமாக ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் குறித்து தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் நேரில் சென்று பார்வையிட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி அளித்துள்ளார் அதில், செய்யனூர் பல கிராமங்கள் டோட்டலாக லாக் ஆகி உள்ளது. வெள்ளம் காரணமாக லாக் ஆகி உள்ளது. படகுகள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. வாழை காடு, நெல்லு வயல தாண்டி படகுல வர முடியல. பத்திரமா இருங்க. செய்யனூர், புளியங்குளம் கிராமம் எல்லாம் அப்படியே மாட்டிக்கொண்டு உள்ளது.
நான் இங்கேதான் இருக்கிறேன் . உதயநிதி சார் கூடவே இருக்கிறார். அவர் தொடர்ந்து பணிகளை செய்கிறார். முடிந்த அளவு மீட்பு பணிகளை செய்கிறோம். விரைவில் முழுமையாக மீட்புக்களை செய்வார்கள். படகை திருப்ப முடியவில்லை. படகை கொண்டு வருவதுதான் பிரச்சனை.
எப்படியாவது இதை கடக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக வந்து மக்களை மீட்போம். கவலை வேண்டும். அரசு இயந்திரம் வேகமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. மக்களை தேடி கண்டுபிடிச்சு மீட்க சவாலா இருக்கு.
தூத்துக்குடியில்... இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை... இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள்... எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்.
கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். மக்களை கண்டுபிடித்து மீட்பதில் சவால்கள் உள்ளன; படகுகள் செல்ல முடியாத நிறைய கிராமங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 15 முதல் 20 கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன; 2 நாட்களாக உணவு மற்றும் எந்தவொரு தொலைதொடர்பும் இல்லாமல் பல வீடுகளிலுள்ள மக்கள் தவிக்கின்றனர் என்று தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் நேரில் சென்று பார்வையிட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி அளித்துள்ளார்.

உதயநிதி போஸ்ட்: இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில், தென் மாவட்டங்களில் பெய்த கடும் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தாமிரபரணி ஆற்றின் கால்வாயின் கரையிலிருந்து வெளியேறிய தண்ணீரால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் தூதுகுழி கிராமத்தில் இன்று நேரில் ஆய்வு செய்தோம்.
மேலும், அந்த கிராமத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் - உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கிடவும் அதிகாரிகள் - அலுவலர்களிடம் வலியுறுத்தினோம்., என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications