இது அதுல்ல.. சென்னை வெள்ளத்தில் சாலையில் உலா வந்த முதலை.. பெருங்களத்தூர் அருகே கண்டுபிடிப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சாலைகளில் பெருமழை மற்றும் வெள்ளத்தின் போது முதலை ஒன்று சாலையில் தென்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முதலை தற்போது சாலைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன.

மிக்ஜாம் புயலை தொடர்ந்து சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு.. தற்போது பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது. முக்கியமாக நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை வெள்ளம் இன்றி காணப்படுகிறது. அதேபோல் சாலையின் உட்பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது.

What happened to the Crocodile that found in side of the Chennai Perungalathur road amid flood?

ஆனால் ஒரு சில ஏரியாக்கள் இன்னும் வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவில்லை. மடிப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், ஐடி ஏரியா பகுதிகள் மொத்தமாக இன்னும் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. இந்த பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்கவில்லை. இப்போதும் சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கே வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளம் வடியாத பகுதிகள்: கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.

முதலை வந்தது: சென்னை மழை காரணமாக ஏரிகளில் தண்ணீர் அளவு அதிகரித்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 8,409 கன அடியாக உயர்ந்தது. இந்த நிலையில் சென்னையில் மழை, புயலுக்கு நடுவே, பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வெளியானது. இது உண்மையான வீடியோ என்று உறுதி செய்யப்பட்டது.

சாலையில் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் உள்ள பகுதிக்கு முதலை சென்றது. மக்கள் அங்கே பைக்கில் செல்லும் நேரத்தில் அசால்ட்டாக இந்த முதலை கடந்து உள்ளது. அப்போது அங்கே ஒரு வாகன ஓட்டி செல்வதும் படம் பிடிக்கப்பட்டு உள்ளது. இதை நெட்டிசன்கள் பகிர்ந்து இணையம் முழுக்க அப்போது டிரெண்டானது. அந்த முதலை அருகே இருக்கும் ஏரி பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

What happened to the Crocodile that found in side of the Chennai Perungalathur road amid flood?

முதலை வர என்ன காரணம்?: இது தொடர்பாக வனத்துறை செயலாளர் விளக்கம் அப்போதே அளித்துள்ளார். அதில், சென்னையில் உள்ள பல நீர் ஆதாரங்களில் முதலைகள் ஏற்கனவே உள்ளன. புயல் மழை காரணமாக தண்ணீர் அதிகரித்துள்ளதால் ஒரு முதலை வெளியே வந்துள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று சென்னை பெருங்களத்தூர் ஏரி அருகே முதலை சாலையில் தென்பட்ட சம்பவத்தில் வனத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த முதலை தண்ணீருக்குள் சென்றுவிட்டது. அது மீண்டும் சாலைக்குள் வர வாய்ப்பு இல்லை. தண்ணீர் அதிக அளவில் இருப்பதால் முதலை வெளியே வந்துள்ளது. அது மீண்டும் வெளியே வர வாய்ப்பு இல்லை.

பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. முதலைகளின் பாத்திகளை, செயல்பாடுகளை கண்காணித்து வருகிறோம், என்று முதலை சாலையில் தென்பட்ட சம்பவத்தில் வனத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

கண்டுபிடிப்பு: இந்த முதலை தற்போது சாலைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. சென்னையில் பெருங்களத்தூரில் உள்ள சாலை ஒன்றில் உடல் மெலிந்த நிலையில் சுவருக்கு அருகே ஒன்றி கிடப்பது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. இணையத்தில் அந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. அந்த முதலை இன்னும் நீர் நிலைக்கு சென்று சேரவில்லையோ என்ற விவாதம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+